• May 28 2026

நச்சுன்னு ஒரே ஒரு போட்டோ.! சிம்பிள் லுக்கில் செம்ம வைரலாகும் விக்ரமின் லேட்டஸ்ட் கிளிக்ஸ்

Aathira / 3 days ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் “சியான்” என்ற பெயரே ஒரு தனி அடையாளமாக மாறியவர் விக்ரம். தான் தேர்ந்தெடுக்கும் கதாபாத்திரத்திற்காக உடல், தோற்றம், குரல் என அனைத்தையும் மாற்றிக் கொண்டு நடிப்பதில் தனக்கென தனி முத்திரை பதித்துள்ளார்.

இந்த நிலையில், தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புதிய புகைப்படம் ஒன்றை பகிர்ந்துள்ளார் விக்ரம். அதில் நீல நிற டி-ஷர்ட் அணிந்து, லைட்டான சிரிப்புடன் எடுத்த அந்த ஸ்டைலிஷ் புகைப்படம் ரசிகர்களின் கவனத்தை வேகமாக கவர்ந்துள்ளது.

புகைப்படம் வெளியான சில நிமிடங்களிலேயே ஆயிரக்கணக்கான லைக்குகளும், கருத்துகளும் குவிந்துள்ளன. “வயசே ஆகல போல”, “இன்னும் அதே சார்ம்”, “சியான் லுக் வேற லெவல்” என ரசிகர்கள் கருத்துகளை பகிர்ந்து வருகின்றனர்.


அதே நேரத்தில் விக்ரமின் மகன் துருவ் விக்ரமும் அந்த புகைப்படத்திற்கு கீழ் 'அப்பாடா' என கமெண்ட் பண்ணியுள்ளார்.

திரைப்படங்களில் தீவிரமான கதாபாத்திரங்களில் நடித்து ரசிகர்களை ஆச்சரியப்படுத்தும் விக்ரம், இந்த முறை எந்த வசனமும் இல்லாமல் ஒரு சாதாரண சிரிப்பால் ரசிகர்களின் மனதை கவர்ந்துள்ளார்.

தற்போது விக்ரம் வெளியிட்ட இந்த புதிய புகைப்படம் இணையத்தில் வைரலாகி, ரசிகர்களிடையே புதிய உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement

Advertisement