• May 28 2026

மகாநதியில் இனி விஜய் கேரக்டர் இல்லையா.? வைரலான தகவலால் ரசிகர்கள் அதிர்ச்சி

Aathira / 3 days ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான “மகாநதி” சீரியலில் இருந்து நடிகர் சுவாமிநாதன் விலகப் போகிறார் என்ற தகவல் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வந்த நிலையில், தற்போது அதுகுறித்து தெளிவான தகவல் வெளியாகியுள்ளது.

2023 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட “மகாநதி” சீரியல், ரசிகர்களிடையே மிகப்பெரிய வரவேற்பைப் பெற்று பல வாரங்கள் டிஆர்பி பட்டியலில் முன்னணியில் இருந்து வருகிறது. குறிப்பாக விஜய் – காவேரி ஜோடிக்கு தனி ரசிகர் பட்டாளமே உள்ளது.

இந்நிலையில், கதையில் சமீபத்தில் ஏற்பட்ட மாற்றங்கள் மற்றும் விஜய் – காவேரி விபத்து காட்சிகளுக்குப் பிறகு சீரியல் வேறு பாதையில் செல்வதாக ரசிகர்கள் கருத்து தெரிவித்து வந்தனர். இதன் மத்தியிலேயே, விஜய் கதாபாத்திரத்தில் நடித்து வரும் நடிகர் சுவாமிநாதன் சீரியலில் இருந்து விலகப் போவதாக தகவல்கள் வெளியாகின.


ஆனால், இந்த தகவலுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில், சீரியலில் தாத்தா கதாபாத்திரத்தில் நடித்து வரும் நடிகர் மணிகண்டன் விளக்கம் அளித்துள்ளார்.

சமீபத்தில் அவர் மற்றும் சுவாமிநாதன் இணைந்து இருக்கும் வீடியோ ஒன்றை சமூக வலைதளத்தில் பகிர்ந்திருந்தார். அதில் ரசிகர் ஒருவர், “சுவாமிநாதன் மகாநதி சீரியலை விட்டு விலகப் போகிறாரா?” என்று கேள்வி எழுப்பியிருந்தார்.

இதற்கு பதிலளித்த நடிகர் மணிகண்டன், “அப்படி எதுவும் இல்லை. சுவாமிநாதன் தொடர்ந்து மகாநதி சீரியலில் நடித்து வருகிறார்” என்று தெரிவித்துள்ளார்.

இதன் மூலம், சுவாமிநாதன் சீரியலை விட்டு விலகுகிறார் என்ற தகவல் வெறும் வதந்தி மட்டுமே என்பது தெளிவாகியுள்ளது.

Advertisement

Advertisement