• Jun 17 2026

'பிளாஸ்ட்' படத்தை அவசரமாக தூக்கும் தியேட்டர்கள்? ரசிகர்களுக்கு காத்திருந்த அதிர்ச்சி

shali / 4 hours ago

Advertisement

Listen News!

ஆக்சன் கிங் அர்ஜுன் நடிப்பில் வெளியாகி வெற்றிகரமாக ஓடி வரும் 'பிளாஸ்ட்' திரைப்படம் தற்போது ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. அறிமுக இயக்குநர் சுபாஷ் கே ராஜ் இயக்கியுள்ள இந்தப் படம், அப்பா–மகள் உறவை மையமாகக் கொண்டு ஆக்சன் மற்றும் உணர்வுபூர்வமான அம்சங்களுடன் உருவாக்கப்பட்டுள்ளது. இதில் அபிராமி, பிரீத்தி முகுந்தன் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.


AGS Entertainment தயாரித்துள்ள இப்படத்திற்கு ரவி பசூர் இசையமைத்துள்ளார். கராத்தே நிபுணரான அர்ஜுனின் குடும்பம் எதிர்கொள்ளும் சவால்கள் மற்றும் வில்லன்களுடன் நடைபெறும் மோதல்களை மையமாகக் கொண்டு விறுவிறுப்பாக படம் நகர்கிறது.

கடந்த மே 28ஆம் தேதி வெளியான 'பிளாஸ்ட்', ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது. டிக்கெட் முன்பதிவுகள் தொடர்ந்து அதிகரித்து வருவதால் பல திரையரங்குகளில் கூடுதல் காட்சிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. பல இடங்களில் ஹவுஸ்புல் காட்சிகளாக ஓடி வரும் இப்படம், வணிக ரீதியாகவும் வெற்றிப்படமாக உருவெடுத்துள்ளது.

உலகளவில் ரூ.70 கோடிக்கும் அதிகமான வசூலைக் கடந்துள்ளதாக கூறப்படும் 'பிளாஸ்ட்', தற்போது தனது மூன்றாவது வாரத்திலும் வெற்றிநடை போட்டு வருகிறது. .

இந்நிலையில், திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடி வரும் இந்த திரைப்படம் வரும் ஜூன் 25ஆம் தேதி Netflix ஓடிடி தளத்தில் வெளியாகும் என தகவல்கள் வெளியாகியுள்ளன. இதனால் திரையரங்குகளில் பார்க்க முடியாத ரசிகர்கள், ஓடிடி வெளியீட்டை ஆவலுடன் எதிர்பார்த்து வருகின்றனர்.

Advertisement

Advertisement