• May 28 2026

விஜய்க்காக வாழ்க்கையையே கொடுக்கத் தயார்... ரசிகர்களை கலங்கவைக்கும் வகையில் பேசிய நடிகர்.!

shali / 4 days ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவரான ஜெய் சமீபத்தில் அளித்த பேட்டி தற்போது சமூக வலைத்தளங்களில் வேகமாக வைரலாகி வருகிறது. அந்த பேட்டியில் அவர், நடிகரும் தற்போதைய முதலமைச்சருமான விஜய் குறித்து மிகுந்த உணர்ச்சியுடன் பேசியுள்ளார்.


அதாவது, “விஜய் அண்ணா ஸ்க்ரீனில் அழுதால் கூட நான் நிஜத்தில் அழுதுவிடுவேன். இந்த வாழ்க்கையையே அவர் கொடுத்தது தான். அவருக்கு ஆதரவு கொடுப்பதால் இந்த வாழ்க்கை போகுமென்றால் அதை இழக்கவும் நான் தயார். எனக்கு எந்தக் கவலையும் இல்லை,” என்று ஜெய் கூறியிருப்பது ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.

சினிமா உலகில் பல நடிகர்கள் தங்களுக்கு பிடித்த முன்னணி நடிகர்கள் குறித்து பேசுவது சாதாரணமாக இருந்தாலும், ஜெய் இவ்வளவு உணர்ச்சிபூர்வமாக விஜய்க்கு ஆதரவு தெரிவித்திருப்பது இணையத்தில் வரவேற்பை பெற்றுள்ளது. 

குறிப்பாக விஜய்யின் ரசிகர்கள் இந்த வீடியோவை அதிகமாக பகிர்ந்து வருகிறார்கள். மேலும், விஜய் அரசியலிலும் தொடர்ந்து கவனம் செலுத்தி வரும் நிலையில், அவருக்கு திரையுலகிலிருந்தே பலர் திறந்தவெளியாக ஆதரவு தெரிவித்து வருவது குறிப்பிடத்தக்கதாக பார்க்கப்படுகிறது. தற்போது ஜெய்யின் இந்த பேட்டி ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.

Advertisement

Advertisement