• May 10 2024

கேமரா மட்டும் இருந்திருந்தால் நான் தான் முதலமைச்சர் ஆகியிருப்பேன்- பரபரப்புத் தகவலைத் கூறிய சரத்குமார்

stella / 1 year ago

Advertisement

Listen News!

தென்னிந்திய சினிமாவில் 90களில் முன்னணி நடிகராக வலம் வந்தவர் தான் சரத்குமார். இவர் நடிகராக மட்டுமல்லாது அரசியல்வாதி, இயக்குநர், தயாரிப்பாளர், பாடிபில்டர் என பன்முகம் கொண்டு திகழ்ந்து வருகின்றார். அத்தோடு இவர் இதுவரை  130க்கும் மேற்பட்ட படங்களில் நடித்திருக்கின்றார்.

சமீபகாலமாக குணச்சித்திர வேடங்களில் நடித்து வரும் இவர் விஜய் நடிப்பில் உருவாகி வரும் வாரிசு திரைப்படத்தில் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்து வருகின்றார். இது ஒரு பக்கம் இருக்க, அகில இந்திய சமத்துவ கட்சியை இவர் நடத்தி வருகிறார். இந்நிலையில் இந்த கட்சியின் சார்பில் சென்னை திருவொற்றியூரில் கட்சியின் தொண்டர்கள், நிர்வாகிகளும் நலிந்தோருக்கு நலத்திட்ட உதவிகள் மற்றும் தீபாவளி பரிசுகள் வழங்கும் நிகழ்ச்சி ஒன்றை நடத்தி இருக்கிறார்கள்.


இதில் அந்த கட்சியின் நிர்வாகிகள், சரத்குமார் கலந்து கொண்டு இருந்தார்கள். மேலும், பொதுமக்களுக்கு தீபாவளி பரிசாக பட்டாசுகள், புத்தாடைகள், இனிப்புகளை சரத்குமார் வழங்கி இருக்கிறார். பின் சரத்குமார் கூறியிருப்பதாவது, சமத்துவ மக்கள் கட்சியினர் அரசியல் மட்டுமில்லாது ஆன்மீகம், சமத்துவம் என அனைத்துமே பேசக்கூடியவர்களாக தான் இருப்பார்கள். தொண்டர்கள் மக்களுக்காக உழைத்தால் தலைவன் முதல்வர் ஆகலாம், பிரதமர் ஆகலாம். எந்த ஒரு பண பலமும் இல்லாமல் பொருள் உதவி இல்லாமல் 15 ஆண்டுகள் இந்த கட்சி இயங்கி வருகிறது என்பது ஒரு பெரிய சாதனை.


அரசியல் என்பது பணம் சம்பாதிப்பதற்கு மட்டுமில்லை. சேவை செய்வதற்கும் தான். நாங்கள் தொண்டு, சேவை, உதவி செய்து கொண்டிருந்த காலங்களில் செல்போன் வீடியோ, கேமரா போன்றவை காலங்களில் இல்லை. இதெல்லாம் இருந்திருந்தால் அன்றைக்கு நாங்கள் தான் முதலமைச்சர் ஆகியிருப்போம். தேர்தலை பற்றி சிந்திப்பதை விட அடுத்த தலைமுறை பற்றி சிந்திப்பவன் தான் தலைவன். அனைவருக்கும் கருத்து சுதந்திரம் கிடைக்கும் என அறிவித்தவன் நான். தீபாவளியை மக்களோடு கொண்டாட வேண்டும் என்பதற்காகத்தான் நான் இந்த விழாவிற்கு வந்திருக்கிறேன் என்று கூறியிருக்கிறார். இவரின் இந்த கருத்து வைரலாகி வருவாக் காணலாம்.


Advertisement

Advertisement

Advertisement