• Apr 27 2024

காரிலேயே உடை மாற்றிக் கொள்வேன்- திரைப் பயணம் குறித்து உருக்கமாகப் பேசிய ராகுல் ப்ரீத்தி சிங்

stella / 1 year ago

Advertisement

Listen News!

தமிழ், தெலுங்கு, ஹிந்தி, ஆகிய திரையுலகில் முன்னணி நடிகையாக இருக்கும் ராகுல் ப்ரீத்தி சிங், தற்போது கமல் ஹாசனின் இந்தியன் 2, சிவகார்த்திகேயனின் அயலான் உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார்.


இந்நிலையில் சினிமாவில் தான் கடந்து வந்த விஷயங்களைப் பற்றி சமீபத்திய பேட்டியில் கூறியுள்ளார் ராகுல் ப்ரீத்தி சிங்.அதில், “சினிமாவில் எனக்கு எந்த பின்னணியும் இல்லை. மும்பையிலுள்ள ஒரு ஓட்டலில் அமர்ந்து எந்தெந்த ஆபீஸுக்கு செல்ல வேண்டும், எங்கு நடிகை தேர்வு நடக்கிறது என்பது குறித்து தெரிந்துக் கொள்வேன்.


பையில் சில உடைகளை வைத்துக் கொண்டு காரிலேயே மாற்றிக் கொள்வேன்.சில வாய்ப்புகள் வருவது போல் இருந்து திடீரென வேறொரு நடிகைக்கு மாறி விடும். சில படங்களில் என்னை ஒப்பந்தம் செய்துவிட்டு, பிறகு மாற்றினார்கள்.


இதையெல்லாம் போராட்டம் என நினைக்க மாட்டேன். ஏனென்றால் கஷ்டப்படாமல் எதுவும் கிடைக்காது” என்று தெரிவித்துள்ளார் ராகுல் ப்ரீத்தி சிங்.மேலும் இவர் பிரபல தயாரிப்பாளரும், நடிகருமான ஜாக்கி பக்னானியை காதலித்து வருகின்றார் என்பதும் குறிப்பிடத்தக்கது.



Advertisement

Advertisement

Advertisement