• Feb 23 2025

விஜய் சார் கிட்ட 5 நிமிஷம் கூட பேச முடியல, நான் என்ன காசா கேட்க போறேன்... மனம் கலங்கிய நடிகர் ...

Kamsi / 1 year ago

Advertisement

Listen News!

தளபதி விஜய் நடிப்பில் வெளியான ஷாஜகான் திரைப்படத்தில் துணை நடிகராக நடித்தவர்  நடிகர் கிருஷ்ணா.  இவர் தமிழ் மொழி திரைப்படங்கள் தவிர மலையாள திரைப்படங்களில் நடிப்பவர் . 14வது வயதில் நெப்போலியன் என்ற மலையாள படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகிய இவர் 1997 இல் மலையாளத்தில் முன்னணி நடிகராக வலம் வந்தார். 


சமீபத்தில் நடந்த ஒரு நேர்காணலில் நடிகர் கிருஷ்ணா கண் கலங்கி ஒரு சம்பத்தை கூறியுள்ளார்.  அவர் கூறியதை பார்க்கலாம் வாருங்கள்,"என்னிடம் விஜய் சார் போன் நம்பர் இருந்தது. ஷாஜகான் திரைப்படம் அவரோட இணைந்து பண்ணின நேரத்தில் அவரோட கதைத்ததுக்கு பிறகு நான் அவரோடு கதைக்கவே இல்லை. அதனால் நான் அவரோட கதைக்கனும் என்று ஆசைப்பட்டு நிறைய தடவை தொடர்பு கொண்டு இருக்கிறேன் . 


ஆனால் கதைக்க சந்தர்ப்பம் கிடைக்கவில்லை. வாய்ஸ் மேஸ்ஸஜ் எல்லாம் போட்டு இருக்கிறேன். அவர் பார்த்ததே இல்லை . ஒரு நாள் நான் கால் பண்ணினேன். விஜய் சார்ருடைய பிஏ எடுத்து இருந்தார். நான் அவரிடம் நான் நடிகர் கிருஷ்ணா நான் விஜய் சார்ரோட ஒரு ஐந்து நிமிடம் கதைக்க வேண்டும். அதற்கு அவர் சொன்னார், நீங்க நினைக்கிற மாதிரி ஷாஜகான் விஜய் இல்லை அவர் இப்ப ரொம்ப பெரிய ஆல் அவரை சந்திக்கிறது ஒன்றும் சின்ன விஷயம் இல்லை. என்று சொல்லிட்டு தொலைபேசியை வைத்து விட்டார். 


எனக்கு ரொம்பவே வருத்தமா போய் விட்டது. நன் ஒன்றும் வெளி ஆல் கூட கிடையாது , அவரோட இணைந்து துணை நடிகராக நடித்த ஒருவர் ஒரு ஐந்து நிமிடம் கதைக்க விடவில்லை ." இவ்வாறு மனம் உடைந்து நடிகர்  கிருஷ்ணா  ஒரு நேர்காணலின் போது கூறியுள்ளார். 


Advertisement

Advertisement