• Sep 30 2023

அவரோட பிளஸ் பொயின்டே இது தான் எங்களால அப்படி பேச முடியாது"- மாரிமுத்து குறித்த முக்கிய ரகசியத்தைப் பகிர்ந்த விசாலாட்சி

stella / 2 weeks ago

Advertisement

Listen News!

தொலைக்காட்சி தொடர்களில் கலக்கி வந்த பிரபல நடிகர் தான் 'எதிர் நீச்சல்'. இவர் இந்த சீரியல் மூலம் மிகவும் பிரபல்யமானார். இந்த சீரியலில் இவர் பேசும் 'அட எம்மா ஏய்' வசனம் பட்டி தொட்டி எங்கும் பரவியுள்ளது. இவர் இயக்குநர் வசந்த் மற்றும் எஸ்.ஜே.சூர்யாவிடம் உதவி இயக்குநராக பணியாற்றினார். இவர் கடந்த 2008-ஆம் ஆண்டு 'கண்ணும் கண்ணும்' 2014-ஆம் ஆண்டு 'புலிவால்' உள்ளிட்ட 2 படங்களை இயக்கினார்.

இயக்குநர் மிஷ்கின் இயக்கத்தில் வெளியான 'யுத்தம்' செய் திரைப்படத்தின் மூலம் நடிகராக அறிமுகமான இவர் பல படங்களில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். சமீபத்தில் வெளியான 'ஜெயிலர்' திரைப்படத்தில் இவரின் கதாபாத்திரம் பாராட்டை பெற்றது. 


இந்நிலையில், நடிகர் மாரிமுத்து மாரடைப்பு காரணமாக அண்மையில் இறப்புக்குள்ளானார்.இவரின் இறப்பு ரசிகர்கள் மத்தியில் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியது. அத்தோடு இனிமேல் எதிர்நீச்சல் சீரியலில் நடிக்கப்போகின்றார் என்ற எதிர்பார்ப்பானது ரசிகர்களிடம் அதிகமாக உள்ளது.


இப்படியான நிலையில் இந்த சீரியலில் விசாலாட்சி என்னும் கதாப்பாத்திரத்தில் நடித்து வரும் சத்தியப்ரியா அண்மையில் ஓர் பேட்டியளித்திருந்தார். அதில் அவர் கூறியதாவது அவருடைய பிளஸ் பொயின்டே மதுரை மொழி தான். அவரு மாதிரி யாராலையும் அவ்வளவு வேகமாகப் பேச முடியாது. சில டைம் எங்களுக்கே ஏதாவது சொல்லித் தருவாரு அதை நாங்களும் கேட்டுப்போம் என்று தெரிவித்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement