• May 18 2024

ஏ.ஆர்.ரஹ்மான் குரலில் வெந்து தணிந்தது காடு படத்தின் பாடல் இதோ

Aishu / 1 year ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் வாரிசு நடிகராக நடிகராக அறிமுகமாகி தனக்கென்று முக்கிய இடத்தைப் பிடித்த முன்னணி நடிகர்களில் முக்கியமானவர் தான் நடிகர் சிம்பு. இவர் நடிப்பில் இறுதியாக வெளியாகிய மாநாடு திரைப்படம் 100 கோடிக்கு மேல் வசூல் செய்து இவரின் மார்க்கெட்டை அதிகரித்துள்ளது.


மேலும் இதனைத் தொடர்ந்து பல திரைப்படங்களில் கமிட்டாகி நடித்து வருகின்றார். இவ்வாறுஇருக்கையில் இயக்குநர் கௌதம் மேனன் இயக்கத்தில் சிம்பு நடித்து வரும் வெந்து தணிந்தது காடு திரைப்படத்தில் சிம்பு 5 விதமான கெட்டப்பில் நடிப்பதாக கூறப்படுகிறது.


இந்தப் படத்தை வேல்ஸ் ஃபிலிம் இன்டர்நேஷனல் நிறுவனம் தயாரித்து வருகிறது. இப்படத்தின் மூலம் தமிழில் அறிமுகமாகும் சித்தி இத்னானி கதாநாயகியாக நடிக்கும் இப்படத்தில் மற்றொரு நடிகை ராதிகா சரத்குமார் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.



இந்நிலையில் சிம்புவின் வெந்து தணிந்தது காடு படத்தின் 'மறக்குமா நெஞ்சம்' பாடலை ஏ.ஆர்.ரஹ்மான்  பாடி உள்ளார்.


இதோ அந்த பாடல்...



Advertisement

Advertisement