• May 19 2024

இந்தவாரம் ஓடிடியில் ரிலீசாக உள்ள படங்களின் மற்றும் வெப் தொடரின் முழு லிஸ்ட்... அடடே இவரோட படமுமா..!

Prema / 1 year ago

Advertisement

Listen News!

திரையுலகைப் பொறுத்தவரையில் வார வாரம் தியேட்டரில் படம் ரிலீசாவது போல் ஓடிடி-யிலும் படங்கள் மற்றும் வெப் தொடர்கள் ரிலீசாகி வருகின்றன. அதேபோன்று இந்த வாரமும் பல படங்கள்வெளியாக உள்ளன. அவ்வாறான படங்கள் மற்றும் வெப் தொடர்கள் எவை எவை என்பதை பார்ப்போம்.

அந்தவகையில் பிரதீப் ரங்கநாதன் இயக்கி நடித்து கடந்த நவம்பர் 4-ஆம் தேதி திரையரங்குகளில் ரிலீசாகி தற்போது வெற்றிநடை போட்டு வருகின்ற திரைப்படம் 'லவ் டுடே'.

அதாவது வெளியானது முதல் சக்கைப்போடு போட்டு வரும் இப்படம் இந்த வாரம் ஓடிடி-யில் ரிலீசாக உள்ளது. வருகிற டிசம்பர் 2-ஆம் தேதி நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் லவ் டுடே திரைப்படம் ரிலீசாகும் என அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டு உள்ளது.


அதேபோன்று துவாரக் ராஜ் இயக்கத்தில் கடந்த நவம்பர் 11-ஆம் தேதி திரையரங்குகளில் ரிலீசான படம் 'பரோல்'. லிங்கா, ஆர்.எஸ்.கார்த்திக் ஆகியோர் நடிப்பில் வெளியான இப்படம் பரோலில் வெளிவரும் கைதியை மையமாக வைத்து எடுக்கப்பட்டு இருந்தது. இப்படம் வருகிற டிசம்பர் 2-ஆம் தேதி சிம்ப்ளி சவுத் ஓடிடி தளத்தில் ரிலீசாக உள்ளது.


மேலும் எம்.சக்திவேல் இயக்கத்தில் பரத் மற்றும் வாணி போஜன் நடிப்பில் கடந்த நவம்பர் 11-ஆம் தேதி ரிலீசான திரைப்படம் 'மிரள்'. திரில்லர் கதையம்சம் கொண்ட இப்படத்தை ராட்சசன் பட தயாரிப்பாளர் தில்லி பாபு பிரமாண்டமாக தயாரித்திருந்தார். இப்படம் வருகிற டிசம்பர் 2-ஆம் தேதி ஆஹா ஓடிடி தளத்தில் ரிலீசாகும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.


அதேபோல் புதுமுக இயக்குநர் கார்த்திக் இயக்கத்தில் கடந்த நவம்பர் 4-ஆம் தேதி ரிலீசான திரைப்படம் 'நித்தம் ஒரு வானம்'.

அசோக் செல்வன் நாயகனாக நடித்திருந்த இப்படத்தில் அவருக்கு ஜோடியாக அபர்ணா பாலமுரளி, ஷிவானி ராஜசேகர் மற்றும் ரித்து வர்மா ஆகியோர் கதாநாயகிகளாக நடித்திருந்தனர். இப்படம் ஆனது வருகிற டிசம்பர் 2-ஆம் தேதி நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் ரிலீசாக உள்ளது.


மேலும் புதுமுக இயக்குநர் ராகவ் மிர்டத் இயக்கத்தில் கடந்த அக்டோபர் மாதம் 30-ஆம் தேதி திரையரங்குகளில் ரிலீசான திரைப்படம் தான் 'காலங்களில் அவள் வசந்தம்'. அஞ்சலி நாயர், கவுசிக் ராம் ஆகியோர் நடித்திருந்த இப்படம் வருகிற டிசம்பர் 1-ஆம் தேதி அன்று சிம்ப்ளி சவுத் ஓடிடி தளத்தில் ரிலீசாக உள்ளது.


ரசிகர்களை பெரிதும் கவர்ந்த 'கொலைகாரன்' படத்தின் இயக்குநர் ஆண்ட்ரூ லூயிஸ் இயக்கத்தில் எஸ்.ஜே.சூர்யா நடித்துள்ள 'வதந்தி' வெப் தொடர், வருகிற டிசம்பர் 2-ஆம் தேதி அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் நேரடியாக ரிலீசாக உள்ளது.

இந்த வெப் தொடரை விக்ரம் வேதா படத்தின் இயக்குநர்களான புஷ்கர் காயத்ரி தயாரித்துள்ளனர். மேலும் இவர்கள் தயாரிப்பில் இதற்கு முன் வெளியான சுழல் வெப்தொடருக்கு அமோக வரவேற்பு கிடைத்தது குறிப்பிடத்தக்கது.


இவற்றைப் போன்று பிற மொழிகளை பொறுத்தவரை தெலுங்கில் 'தர்மபுரி' என்கிற படம் ஆஹாவில் ரிலீசாக உள்ளது. அதேபோல் மலையாளத்தில் மோகன்லாலின் 'மான்ஸ்டர்' படம் ஹாட்ஸ்டாரில் ரிலீசாக உள்ளது.

இந்தியில் ராஷ்மிகாவின் 'குட் பாய்'  படம் நெட்பிளிக்ஸிலும், 'இந்தியா லாக்டவுன்' ஜீ5 தளத்திலும், 'குவாலா' என்ற படம் நெட்பிளிக்ஸிலும் ரிலீசாக உள்ளன. 


இவ்வாறாக இந்தவராம் ஏராளமான படங்கள் மற்றும் வெப்தொடர்கள் ஓடிடியில் ரிலீசாக உள்ளன.

Advertisement

Advertisement