• May 19 2024

சாப்பாட்டைக்கூட கவனமாகத் தான் சாப்பிடுவார், இப்பிடிப் பண்ணிட்டாரே- ஆர்.எஸ்.சிவாஜி மறைவுக்கு இரங்கல் தெரிவித்த பயில்வான் ரங்கநாதன்

stella / 8 months ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் உதவி இயக்குநராக இருந்து பின்னர்  நகைச்சுவை மற்றும் குணசித்திர வேடங்களில் நடிதது பிரபல்யமானவர் தான் ஆர்.எஸ்.சிவாஜி.தமிழில் இறுதியாக நயன்தாரா நடிப்பில் வெளியான கோலமாவு கோகிலா என்னும் திரைப்படத்தில் நயன்தாராவின் அப்பாவாக நடித்திருந்தார்.

தொடர்ந்து சாய்பல்லவி நடிப்பில் வெளியான கார்கி படத்திலும் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்திருந்தார்.இருப்பினும் இவர் உடல் நலக்குறைவு கடந்த இரண்டு நாட்களுக்கு முதல் உயிரிழந்தார்.இவரது இழப்பிற்கு நடிகர் கமல்ஹாசன்இ இயக்குநர் நெல்சன் திலீப் குமார் என பல பிரபலங்ள் தமது இரங்கலைத் தெரிவித்திருந்தனர்.


இந்நிலையில்,பயில்வான் ரங்கநாதன் ஆர்.எஸ்.சிவாஜியின் மறைவுக்கு இரங்கல் தெரிவிக்கும் வகையில் யூடியூப் சேனல் ஒன்றில் பேட்டி கொடுத்துள்ளார். அதில் அவர் கூறியதாவது ஆர்.எஸ்.சிவாஜியின் அப்பா எம்.ஆர்.சந்தானம், சிவாஜி நாடக கம்பேனியில் பணியாற்றினார். சிவாஜி கணேஷின் வலது கரமாக இருந்த எம்.ஆர்.சந்தானம் அவர் மீது இருந்த பற்று காரணமாக தனது இளைய மகனுக்கு சிவாஜி என்று பெயர் வைத்தார்.

எம்.ஆர்.சந்தானத்தின் மூத்த மகன் தான் சந்தான பாரதி அவர் தன்னுடன் அப்பா பெயரை சேர்த்துவைத்துக்கொண்டார். இவர்கள் வீடும் கமல்ஹாசன் வீடும் ஆழ்வார் திருநகரில் பக்கத்து பக்கத்து வீட்டில் இருந்ததால், சந்தான பாரதி,ஆர்.எஸ் சிவாஜி இருவருக்கும் நெருங்கிய நண்பராக உள்ளார் கமல். இதனால், இருவரும் கமலின் அதிகபடங்களில் நடித்துள்ளனர்.


சிக்ரெட், குடி என சிவாஜிக்கு எந்தவிதமான கெட்டப்பழக்கமும் இல்லை, சாப்பாட்டைக்கூட பார்த்து பார்த்துத்தான் சாப்பிடுவார். அதே போல, யாரிடமும் திடீர் என்று பேசமாட்டார். மிகவும் நிதானமாக நிறுத்தி பேசக்கூடிய நல்ல மனிதர். 66 வயது என்பது சாகுற வயசு இல்லை இருந்தாலும், கடவுள் இப்படி பண்ணிட்டாரே என்று பயில்வான் ரங்கநாதன் அதில் கூறியுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.


Advertisement

Advertisement