இனிக்கும் இளமை என்ற திரைப்படத்தில் அறிமுகமானவர் கேப்டன் விஜயகாந்த். இவர் நடிகராகவும் அரசியல்வாதியாகவும் உள்ளார்.தொடர்ந்து தூரத்து இடி முழக்கம், சட்டம் ஒரு இருட்டறை, வைதேகி காத்திருந்தாள்போன்ற திரைப்படங்களில் எதார்த்தமான நடிப்பினை வெளிக்காட்டி முன்னணி நடிகராக சினிமாவில் கலக்கினார்.
சினிமாவிலிருந்து அரசியலுக்கு வந்து தேமுதிக எனும் கட்சியைத் தொடங்கினார். சினிமாவைப் போல் அரசியலிலும் அசுர வளர்ச்சி கண்ட விஜயகாந்த், குறுகிய காலத்தில் சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவராகும் அளவுக்கு உயர்ந்தார்.
இதன் பின்னர் உடல்நலக்குறைவு ஏற்பட்டதன் காரணமாக சினிமாவிலும், அரசியலிலும் இருந்து விலகியே இருந்து வருகிறார் விஜயகாந்த். இதனால் இவரது மனைவி பிரேமலதா கட்சியை கவனித்து வருகிறார்.
நடிகர் விஜயகாந்துக்கு விஜய பிரபாகர், சண்முக பாண்டியன் என இரண்டு பிள்ளைகள் உள்ளார்கள். இதில் விஜயபிரபுக்காரனுக்கு கீர்த்தனா என்பவருடன் நிச்சயதார்த்தம் நடைபெற்றது.
ஆனால், இதுவரை திருமணம் நடக்கவில்லை. அதே போல் ஷண்முக பாண்டியனும் இதுவரை திருமணம் செய்துகொள்ளவில்லை.
இவ்வாறுஇருக்கையில் வெளிநாட்டை சேர்ந்த பெண் ஒருவரை காதலித்து வந்ததாக தகவல் வெளியானது. இவர்கள் இருவரும் ஒன்றாக படித்தவர்கள் என்றும் தெரிவிக்கின்றனர்.
ஷண்முக பாண்டியன் காதலித்ததாக கூறப்படும் அந்த பெண்ணுடன் எடுத்துக்கொண்ட புகைப்படம் நமக்கு கிடைத்துள்ளது.
இதோ அந்த புகைப்படம்..
பிற செய்திகள்
- நம்மட பாவ்னி அமீருக்கு திருமணம் நடந்து முடிந்து விட்டதா-வைரலாகும் வீடியோ..!
- அடடே.. இவர் தான் நடிகை அம்பிகாவின் மகனா .? இவ்ளோ நாளா இது தெரியாம போச்சே ..!
- பிரபல நடிகரின் படத்திற்கு விளம்பரம் செய்த நாக சைதன்யா
- தல ரசிகர்களுக்கு சூப்பர் செய்தி..!
- ஷாருக் கான் மற்றும் பிரபல தமிழ் நடிகரை ஒரே இடத்தில் சந்திக்கும் சூப்பர் ஸ்டார் ரஜினி !
சமூக ஊடகங்களில்:
- Facebook : சினிசமூகம் முகநூல்
- Twitter: சினிசமூகம் ட்விட்டர்
- Instagram : சினிசமூகம் இன்ஸ்டாகிராம்
- YouTube : சினிசமூகம் யு டியூப்
Listen News!