• Sep 21 2024

நடிகர் ஜீவாவின் மகனை பார்த்துள்ளீர்களா..ஷாக்கடைந்த ரசிகர்கள்-இதோ புகைப்படம்..!

Aishu / 2 years ago

Advertisement

Listen News!

நடிகர் ஜீவாவிற்கு இவ்வளவு பெரிய மகனா ! முதல்முறையாக வெளியான அவரின் புகைப்படம் இதோ..

தமிழ் திரை உலகின் இளையதலைமுறை நடிகர்களில் ஒருவரான ஜீவா பிரபல தயாரிப்பாளர் ஆர்பி சவுத்ரி அவர்களின் மகன் ஆவார். கடந்த 2003ஆம் ஆண்டு ’ஆசை ஆசையாய்’ என்ற திரைப்படத்தின் மூலம் நடிகராக அறிமுகமான ஜீவா, அதன்பின் ’ராம்’ ’டிஷ்யூம்’ ’கற்றது தமிழ்’ ’சிவா மனசுல சக்தி’ ’கோ’ ’நண்பன்’ உள்பட பல வெற்றிப் படங்களில் நடித்து மக்கள் மனதில் இடம் பிடித்தார்.

எனினும் சமீபத்தில் வெளியான பாலிவுட் திரைப்படமான ’83’ என்ற திரைப்படத்தில் தமிழக கிரிக்கெட் வீரர் ஸ்ரீகாந்த் கேரக்டரில் ஜீவா நடித்து அசத்தி இருந்தார் .

எனினும் தற்போது இவர் நடிப்பில் தற்போது கோல்மால், வரலாறு முக்கியம், மேதாவி உள்ளிட்ட திரைப்படங்கள் உருவாகி வருகிறது. அதுமட்டுமின்றி சுந்தர்.சி இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படத்தில் அவர் நடித்து வருகிறார்.

இந்நிலையில் சமீபத்தில் முக்கிய நட்சத்திரங்களான ஆதி மற்றும் நிக்கி கல்ராணிக்கு திருமணம் நடைபெற்றது, இதில் திரையுலகை சேர்ந்த பலரும் கலந்து கொண்டனர்.அந்த புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலானது.

அதில் நடிகர் ஜீவா அவரின் மனைவி மற்றும் மகனுடன் கலந்து கொண்டுள்ளார், ஜீவாவின் மகன் Sparsha Choudary புகைப்படத்தை கண்ட ரசிகர்கள் ஆச்சர்யம் அடைந்துள்ளனர். இதோ அந்த புகைப்படத்தை நீங்களே பாருங்கள்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement