• Dec 08 2023

ரகசியத் துப்பாக்கி வைத்திருக்கும் கமல்ஹாசன்- என்ன காரணம் தெரியுமா?- இப்படியொரு மிரட்டலுக்கு ஆளாகியிருக்கிறாரா?

stella / 2 weeks ago

Advertisement

Listen News!

தமிழ் திரையுலகில் தவிர்க்க முடியாத நடிகராக வலம் வருபவர் தான் கமல்ஹாசன். இவரது நடிப்பில் இறுதியாக வெளியாகிய விக்ரம் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றது.இதனை அடுத்து தற்போது இந்தியன் 2 படத்தின் படப்பிடிப்பில் பிஸியாக நடித்துக் கொண்டு வருகிறார். அடுத்ததாக மணிரத்தினம் இயக்கத்தில் தக் லைஃப் என்ற படத்திலும் நடிக்க இருக்கிறார்.

இது தவிர விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் நிகழ்ச்சியியையும் தொகுத்து வழங்கி வருகின்றார். மேலும் இவர் பேசும் பேச்சுக்களால் அடிக்கடி சர்ச்சைகளிலும் சிக்கி வருகின்றார்.


இது ஒரு புறம் இருக்க பிரபல சினிமா பத்திரிக்கையாளர் அந்தனன் கமலை பற்றி ஒரு முக்கியமான விஷயத்தை பகிர்ந்தார். கமல் லைசன்ஸுடன் ஒரு துப்பாக்கி வைத்திருக்கிறாராம். அது ஆரம்பத்தில் கமல் ஹிந்தியில் ஏக் து சே கேலியே படத்தில்  நடித்து மிகவும் பிரபலமாகி இந்தி திரையுலகமே கமலை திரும்பி பார்த்த தருணம்.


அதனால் ஒரு தமிழன் இந்தியில் வந்து ஆளுவதா என்று பாலிவுட்டில் இருந்து பல எதிர்ப்புகள் கமலை நோக்கி வந்ததாம். கொலை மிரட்டலும் விடுத்தார்களாம். அதிலிருந்தே கமல் கையில் துப்பாக்கி குண்டுகளை வைத்தே அந்த நேரத்தில் செல்வாராம் என்றும் கூறியுள்ளார்.

Advertisement

Advertisement

Advertisement