சிந்து சமவெளி திரைப்படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகர் ஹரிஷ் கல்யாண். தொடர்ந்து அரிது அரிது, சட்டப்படி குற்றம், பொறியாளன்,வில் அம்பு போன்ற சில தமிழ் படங்களில் நடித்து இருந்தார். இருப்பினும் இவருக்கு பெரிய அடையாளத்தை ஏற்படுத்தி தரவில்லை.
பின்னர் கடந்த 2017-ஆம் ஆண்டு விஜய் டிவி-இல் ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டார் இந்த நிகழ்ச்சிக்குப் பிறகு தான் ஹரிஷ் கல்யான் ரசிகர்கள் அதிகமான அதன்பிறகு அவர் நடித்த பியார் பிரேமா காதல் மற்றும் இஸ்பேட் ராஜாவும் இதயராணியும் ஆகிய இரண்டு படங்களும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று சூப்பர் ஹிட் ஆகி இருந்தது.
அதன்பின் இவர் விவேக் நடிப்பில் வெளியாகியிருந்த தாராள பிரபு திரைப்படத்தில் நடித்தார். ரொமான்டிக் காமெடியாக உருவாகி இருந்த படம் ரசிகர்ளிடம் பெரும் வரவேற்பை பெற்று ஒரு ரசிகர் பட்டாளத்தை கொன்டுள்ளார்.
இந்நிலையில் ஹரிஷ் கல்யாண் தற்போது சண்முகம் முத்துசாமி இயக்கத்தில் புதிய படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் ஹரிஷ் கல்யாணுக்கு ஜோடியாக அதுல்யா ரவி நடித்து வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு தற்போது சென்னையை சுற்றியுள்ள பகுதிகளில் படமாக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில் ஹரிஷ் கல்யாண் பிறந்தநாளை முன்னிட்டு இந்தப் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது. இந்த படத்திற்கு டீசல் என தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. மற்றொரு போஸ்டரில் பெட்ரோல் பங்க் நிலையத்தில் அதுல்யா ரவியுடன் ஹரிஷ் போஸ் கொடுத்துள்ளார். இந்த போஸ்டர் தற்போது அதிக வரவேற்பை பெற்று வருகின்றது.
பிற செய்திகள்
- மீனா,விஜய் சேதுபதியை தொடர்ந்து கமலுக்கு கிடைத்த அங்கீகாரம்…இதோ புகைப்படம்..!
- கோபத்தோடு ஈஸ்வரி எடுத்த முடிவு- கோபிக்கு காத்திருக்கும் பெரிய சிக்கல் – இன்றைய எபிசோட் அப்டேட்
- சுடுகாட்டில் தோழிகளுடன் சிரித்துக்கொண்டிருந்த மீனா-ஆதாரங்களுடன் வெளியான வீடியோ..!
- இளைய தளபதி என்ற பட்டம் முதலில் இந்த நடிகருக்கு தான் இருந்ததா..வெளியான தகவலால் ஷாக்கடைந்த ரசிகர்கள்..!
- கடலின் நடுவே கவர்ச்சி-ராய் லட்சுமியின் லேட்டஸ்ட் கிளிக்ஸ்..!
சமூக ஊடகங்களில்:
- Facebook : சினிசமூகம் முகநூல்
- Twitter: சினிசமூகம் ட்விட்டர்
- Instagram : சினிசமூகம் இன்ஸ்டாகிராம்
- YouTube : சினிசமூகம் யு டியூப்
Listen News!