தமிழ் சினிமா உலகம் உணர்வுகளால் இயங்கும் ஓர் பிரம்மாண்ட கலை படைப்பு. ஒரு திரைப்படம் மட்டும் ஒருவரின் வாழ்க்கையை பிரதிபலிக்கிறது என்றால், அது அந்த படத்தின் வெற்றியை மட்டும் அல்ல, அதன் உணர்வுப் பெருக்கத்தையும் எடுத்துக் காட்டுகிறது. அந்த வகையில், சமீபத்தில் வெளியாகவுள்ள “3BHK” திரைப்படம் இயக்குநர் தமிழரசன் பச்சமுத்துவின் மனதைக் கவர்ந்துள்ளது.
பிரத்யேக காட்சியின் போது இந்த திரைப்படத்தை பார்த்த இயக்குநர், தனது சமூக வலைத்தளத்தில் உணர்ச்சி பூர்வமாக எழுதிய பதிவே தற்போது பலரிடையே கவனத்தை ஈர்த்துள்ளது.
சமூக வலைத்தளத்தில் தனது கருத்துகளை பகிர்ந்த இயக்குநர் தமிழரசன் பச்சமுத்து, “நானும் ஒரு டைம் வரைக்கும் எங்கப்பாவோட கனவை தூக்கிட்டு சுத்திட்டு இருந்ததுனாலயோ என்னவோ, இந்தப் படம் பாத்ததில இருந்து கொஞ்சம் என்வீட்டுப் படம் மாதிரியே இருக்கு” என்று உருக்கமாக தெரிவித்திருந்தார்.
அதுமட்டுமல்லாது, “கண்டிப்பாக பாக்குற உங்களுக்கும் அப்படித் தான் இருக்கும்... போய் பாருங்க... connect ஆகும்... நெருக்கமான வெற்றிக்கு வாழ்த்துகள்,” எனவும் அவர் தனது பாசமிகு பாராட்டுகளைத் தெரிவித்திருக்கிறார்.
Listen News!