• May 18 2024

இலக்கியா சீரியலில் இருந்து விலகிய பிரபல நடிகர்- அவருக்கு பதிலாக களமிறங்கிய சுந்தரி சீரியல் நடிகர் யார் தெரியுமா?

stella / 9 months ago

Advertisement

Listen News!

சன் டிவி தொலைக்காட்சியில்,சூப்பர் ஹிட்டாக ஓடிக் கொண்டிருக்கும் சீரியல் தான் இலக்கியா. இந்த சீரியலில் கதாநாயகியாக ஹிமா பிந்து நடிக்கின்றார்.இவருடன் சீரியல் நடிகர் நந்தன் லோகநாதன் ஹீரோவாக நடித்து வருகின்றார்.

சூப்பர் ஹிட்டாக ஓடிக் கொண்டிருக்கும் இந்த சீரியலில் ரூபாஸ்ரீ, மீனா வேமுறி, சுஷ்மா நாயர், ஜெய் ஸ்ரீனிவாசா, காயத்ரி ப்ரியா உள்ளிட்ட பலர் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்து வருகின்றனர். இந்த நிலையில் இந்த சீரியலில் ஹீரோவுக்கு தம்பி கதாபாத்திரத்தில் நடித்து வரும் ஜெய் ஸ்ரீனிவாசா, இந்த சீரியலில் இருந்து விலகவுள்ளதாக கூறப்படுகின்றது

இவருக்கு பதிலாக இனி   சுந்தரி சீரியலில், கிருஷ்ணா கதாபாத்திரத்தில் நடித்து வரும், நடிகர் அரவிஷ் நடிக்க உள்ளார்.இதுகுறித்து இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அவர் கூறியுள்ளதாவது, "அனைவருக்கும் வணக்கம், நான் இலக்கியா சீரியலில் இருந்து அதிகாரப்பூர்வமாக விலகுகிறேன் என்பதை உங்களுக்குத் தெரிவிக்க விரும்புகிறேன்.


 இலக்கியா சீரியலில், கார்த்திக் கதாபாத்திரத்தை எனக்கு கொடுத்ததற்கு நன்றி ஹிமா பிந்து, நந்தன் லோகநாதன் மற்றும் ரூபாஸ்ரீ ஆகியோரை நான் மிகவும் மிஸ் செய்கிறேன் என தெரிவித்திருந்தார்.

இவருக்கு பதிலாக இனி, அரவிஷ் நடிக்க உள்ளார். இது நாள் வரை கார்த்திக்  கதாபாத்திரத்திற்கு பெரிய முக்கியத்துவம் கொடுக்கப்படவில்லை என்றாலும், இதுவரும் நாட்களில், கார்த்திக் கதாபாத்திரம் முக்கிய கதாபாத்திரமாக மாற்றப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.


Advertisement

Advertisement