• Jan 09 2025

பணத்தை எடுத்தாலும் பைனலிஸ்ட் தான்! அத்துமீறிய ரவீந்தர்! பிக்பாஸ் கொடுத்த வார்னின்!

subiththira / 19 hours ago

Advertisement

Listen News!

விஜய் டிவி தொலைக்காட்ச்சியில் விறுவிறுப்புக்கு பஞ்சம் இல்லாமல் ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் சீசன் 8 தற்போது இறுதி வாரங்களை நோக்கி ஓடிக்கொண்டிருக்கிறது. இந்நிலையில் அடுத்த அதிரடியான ப்ரோமோ ரிலீஸாகியுள்ளது.


பிக்பாஸ் -8ல் இன்னும் கொஞ்ச நாட்களில் யார் வின்னர் என்ற தீர்ப்பு கிடைத்து விடும் என போட்டியாளர்கள் மற்றும் ரசிகர்கள் எண்ணியிருந்த நேரம் பிக்பாஸ் ஒரு தரமான ஷாக் கொடுத்தார். எலிமினேட் ஆகி வெளியேறிய போட்டியாளர்களை மீண்டும் உள்ளே அனுப்பி இன்னும் சுவாரஷ்யத்தை கூட்டியுள்ளார். 


தற்போது வெளியாகிய ப்ரோமோவில் ரவீந்தர் " அவர்களில் யார் எடுத்தாலும் நாங்க நினைக்கிற ஆள் தான் பெட்டியை எடுக்கவைக்கணும்" என்று வில்லங்கமாக பிளான் போடுகிறார். ரயான் மற்றும் தீபக்கிடம் சொல்கிறார் " நீங்க அடிக்கணும்னு நினைக்கிறவங்க கிட்ட அதிகமா இருக்கு" என்று சொல்கிறார். அதற்கு ராயன் "நான் பணத்தை எடுத்துட்டு போனேன் என்று இல்லை பைனலிஸ்டா இருந்து இருக்கேன் என்பது தான் வேணும்" என்று சொல்கிறார். அதற்கு ரவீந்தர் "பணத்தை எடுத்துட்டு போனாலும் நீங்கத்தான் பைனலிஸ்ட்" என்று சொல்கிறார். 


இதனை அடுத்து ரவீந்தரை கன்பிரஷன் ரூமிற்கு அழைத்த பிக்பாஸ் " ரவீந்திரன் இந்த வீட்டுக்குனு நிறைய விதிமுறைகள் இருக்கு அதையும் மீரி வோட்டிங் பற்றி பேசி இருக்கீங்க. மக்கள் ஒபினியன் பற்றி பேசி இருக்கீங்க" என்று சொல்கிறார். இதனால் அழுதுகொண்டே ரவீந்தர் சாரி பிக் பாஸ் என்று சொல்வதுடன் ப்ரோமோ முடிவடைகிறது. 

Advertisement

Advertisement