• May 11 2024

அடேங்கப்பா... ஜி.வி பிரகாஷ் இத்தனை கோடி சொத்துக்கு சொந்தக்காரரா..!

Prema / 10 months ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் முன்னணி இசையமைப்பாளராக வலம் வருபவர் ஜிவி பிரகாஷ். இவர் சாம் ஆண்டன் இயக்கிய 'டார்லிங்' என்ற படம் மூலம் தமிழ் திரையுலகில் ஹீரோவாக அறிமுகமானார். இதனைத் தொடர்ந்து 'த்ரிஷா இல்லைனா நயன்தாரா, நாச்சியார், சர்வம் தாள மயம், சிவப்பு மஞ்சள் பச்சை, பேச்சிலர், செல்ஃபி' போன்ற படங்களில் அடுத்தடுத்து தன்னுடைய நடிப்பினை வெளிப்படுத்தி வந்தார்.


இவ்வாறாக பல படங்களில் இன்றுவரை கதாநாயகனாக நடித்து திரையுலகில் திறமையான ஒரு நடிகராகவும் தன்னை அடையாளப்படுத்தி உள்ளார். அவரது நடிப்பில் வந்த படங்கள் ரசிகர்களிடம் பெரிதும் வரவேற்பை பெற்றுள்ளன.


இவ்வாறாக இசையமைப்பாளர், நடிகர், பாடகர் என பன்முகத்திறமை கொண்டு சினிமாவில் பிஸியான ஒரு பிரபலமாக வந்து கொண்டிருக்கின்றார். தன்னுடைய பள்ளித் தோழியான பாடகி சைந்தவியை காதலித்து திருமணம் செய்து கொண்ட இவர் இன்றைய தினம் தன்னுடைய பிறந்தநாளை கொண்டாடுகின்றார். 


இந்நிலையில் இவரிடம் உள்ள சொத்து மதிப்பு குறித்த தகவல் வெளியாகி உள்ளது. அந்தவகையில் ஜி.வி.பிரகாஷ் 5 கோடி சொத்து வைத்துள்ளதாக கூறப்படுகின்றது. 

Advertisement

Advertisement

Advertisement