• Feb 21 2025

தனுஷ் படத்திற்கு வில்லனாக நடிக்க மறுத்த அர்ஜுன்..! ஏன் தெரியுமா..?

Mathumitha / 1 day ago

Advertisement

Listen News!

தயாரிப்பு ,இயக்கம் என தமிழ் சினிமாவில் மிகவும் பிஸியாக இருக்கும் ஒரு பிரபலம் தனுஷ் இவர் இயக்கத்தில் நாளை மறுதினம் வெளியாகவுள்ள neek திரைப்படம் நல்ல எதிர்பார்ப்பினை பெற்று வருகின்றது. தனுஷ் நடிகராக மட்டுமல்லாமல் இயக்குநராக மக்கள் மனதில் இடம்பிடித்துள்ளார்.


வேறு இயக்குநரின் படங்களை பெரிதும் குறைத்து வரும் தனுஷ் இட்லி கடை திரைப்படத்தினை தொடர்ந்து போர்த்தொழில் திரைப்பட இயக்குநர் விக்னேஷ் ராஜா இயக்கத்தில் ஐசரி கணேஷ் இயக்கத்தில் நடிக்கவுள்ளார். இந்த படம் ஏப்ரல் மாதம் படப்புடிப்புகள் ஆரம்பிக்கவுள்ளதாக தெரியவந்துள்ளது.


இந்த நிலையில் இப் படத்தில் வில்லனாக நடிப்பதற்கு நடிகர் அர்ஜுன் அவர்களுடன் பேச்சு வார்த்தைகள் இடம்பெற்று வருகின்றது. ஆனால் விடாமுயற்சி திரைப்படத்தில் இவர் நடிப்பதற்காக 7 கோடி சம்பளம் கொடுக்கப்பட்டிருந்தது. அந்த படத்தின் பின்னர் அர்ஜுன் தனது சம்பளத்தினை 7 கோடிக்கு மேல் கேட்டு வருகின்றார். மற்றும் இந்த படத்திலும் பெரிய சம்பளத்தினை கேட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Advertisement

Advertisement