• Jan 19 2025

பிக் பாஸ் கேமரா முன் தனது கவித்திறனை வெளிப்படுத்திய போட்டியாளர் யார் தெரியுமா? அனைத்து தாய்மார்களுக்கும் சமர்ப்பணம்! வைரல் வீடியோ

Aathira / 1 year ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி முடிவடையும் கட்டத்தில் உள்ள  பிக் பாஸ் நிகழ்ச்சியில்  போட்டியாளராக  பங்குபெற்றியவர் தான் நிக்சன் . ராப் பாடுவதில் திறமை படைத்த இவர் தனது ராப் பாடல்கள் மூலம் பிக் பாஸ் ரசிகர்களை கவர்ந்தார் . 

கடந்த கிழமைகளில் நடந்த அத்தியாயங்களில்  போட்டியாளர்களின் குடும்பங்கள் வந்து பார்வையிடும்  டாஸ்க் நடைப்பெற்றது . அப்போது ரவினாவின் அம்மா நிக்சனிடம்  ராப் சோங் பட சொல்லி கேட்டு இருந்தாங்க.

இந்த நிலையில், பிக் பாஸ் கேமரா முன்னிலையில், அனைத்து தாய்மாருக்கும் தனது கவிதையை சமர்ப்பித்துள்ளார் நிக்சன்.


அதன்படி, ரவினாவின் அம்மா சீக்கிரம் போனதால ராப் சோங் பாட முடியல .  அதனால இன்டைக்கு ராப் பாடலை விட கவிதை எல்லாருக்கும் விளங்கும் என்பதால் கவிதை ஒன்று எழுதி  இருக்கன் . இந்த கவிதை எல்லா அம்மாமாருக்கும்  சமர்ப்பிக்கின்றேன் எனக் கூறி கவிதையை சொல்லியுள்ளார் நிக்சன்.

அதில், "அம்மா உன்னை பற்றி பாட வார்த்தைகளும் இல்லை நீ காட்டிய அன்பை கூற கவித்திறனும் இல்லை ஏதோ என்னால் முடிந்து நீ தந்த ஞானம் வைத்து நான்  

எழுதிய ஓரிரு  வார்த்தைகள் உனக்காக  உன்னுள்ளே நான் வாழ்ந்த காலங்கள் மறந்தேனே ஊணாகி உயிராகி உன் முன்னே தவழ்ந்தேனே உன் போல யார் என்று ஊர் எங்கும் சொன்னனே ஊர் போற்றி நீ காண ஆளாகி நின்றேனே , காயங்கள் வரும் போது மார்போடு சாய்த்தாயே!  காலங்கள் கடந்தோட  என் பிள்ளை ஆனாயே   நான் வாழ எனக்காக ஓடாக தேய்ந்தாயே  யார் என்ன சொன்னாலும் என் தெய்வம் நீ தாயே ...''

இவ்வாறு தானே எழுதிய இந்த கவிதையை எல்லா தாய்மாருக்கும் நிக்சன் சமர்ப்பித்தார். தற்போது குறித்த வீடியோ வைரலாகியுள்ளது.

Advertisement

Advertisement