• May 29 2023

நடிகை த்ரிஷா தனது பிறந்தநாளை தோழிகளுடன் எங்கு கொண்டாடியுள்ளார் தெரியுமா?- நல்ல வேளை அங்க மட்டும் போகல

stella / 3 weeks ago

Advertisement

Listen News!

முன்னணி நடிகையான த்ரிஷா இன்று தனது 40வது பிறந்த நாளை கொண்டாடினார். அமீர் இயக்கிய மெளனம் பேசியதே திரைப்படம் மூலம் நாயகியாக அறிமுகமான த்ரிஷா, 20 ஆண்டுகளில் தென்னிந்தியாவின் முன்னணி ஹீரோயினாக வலம் வருகிறார். ரஜினி, கமல், விஜய், அஜித், சூர்யா, விக்ரம், சிம்பு, தனுஷ் என முன்னணி நடிகர்களுடன் ஜோடியாக நடித்து அசத்தியுள்ளார்.

கடந்த சில வருடங்களாக சரியான கேரக்டர் அமையாமல் லைம் லைட்டில் இல்லாமல் இருந்தார் த்ரிஷா. ஆனால், கடந்தாண்டு வெளியான பொன்னியின் செல்வன் முதல் பாகம், தற்போது ரிலீஸாகியுள்ள பொன்னியின் செல்வன் 2 இரண்டுமே த்ரிஷாவுக்கு சூப்பரான கம்பேக் கொடுத்தது. குந்தவை கேரக்டரில் நடித்த த்ரிஷா தனது பேரழகால் ரசிகர்களை திணறடித்திருந்தார்.


பொன்னியின் செல்வனில் மாஸ் காட்டிய த்ரிஷாவுக்கு விஜய்யின் லியோ படத்தில் நாயகியாகும் வாய்ப்புக் கிடைத்தது. விஜய்யின் ஆல்டைம் ஃபேவரைட் நாயகியான த்ரிஷா, லியோவில் இணைந்துள்ளதால் ரசிகர்களும் அதிக எதிர்பார்ப்பில் உள்ளனர். இந்நிலையில், லியோ ஷூட்டிங், பொன்னியின் செல்வன் ப்ரமோஷன் என பிஸியாக இருந்த த்ரிஷா, இன்று தனது பிறந்தநாளை உற்சாகமாகக் கொண்டாடியுள்ளார்.

பிறந்தநாளை முன்னிட்டு சீரடியில் உள்ள சாய் பாபா கோயிலுக்குச் சென்றுள்ளார் த்ரிஷா. அங்கு பயபக்தியுடன் சாய் பாபாவை வழிபட்ட த்ரிஷா, கேக் வெட்டி பிறந்தநாள் கொண்டாடியுள்ளார். த்ரிஷாவுடன் அவரது நெருங்கிய தோழிகளும் சீரடி சென்றுள்ளனர். பிறந்தநாளை பார்ட்டியுடன் செலிப்ரேட் செய்யாமல், சாய் பாபா கோயில் சென்று கொண்டாடிய த்ரிஷாவை ரசிகர்கள் பாராட்டி வருகின்றனர்.


இந்நிலையில், சீரடி சாய் பாபா கோயில் வழிபட்டது, கேக் வெட்டி பிறந்தநாள் கொண்டாடியது, தோழிகளுடன் எடுத்துக்கொண்ட செல்ஃபி ஆகியவற்றை தனது இன்ஸ்டாவில் ஷேர் செய்துள்ளார் த்ரிஷா. மேலும், பிறந்தநாளுக்கு வாழ்த்திய அனைவருக்கும் எனது அன்பும் நன்றியும். என் இதயம் மிக நன்றியுடன் இருப்பதாக குறிப்பிட்டுள்ளார். த்ரிஷாவின் இந்த போட்டோக்கள் சமூக வலைத்தளங்களில் ட்ரெண்டாகி வருகின்றன.


Advertisement

Advertisement

Advertisement