• Jun 07 2025

ஜப்பானில் ரிலீஸாகும் "டூரிஸ்ட் பாமிலி" திரைப்படம்..! எப்போது தெரியமா?

Roshika / 2 weeks ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் வெற்றி நடைபோட்டு வருகின்ற திரைப்படம் "டூரிஸ்ட் பாமிலி " இந்த திரைப்படம் மே 1 ம் திகதி திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றதுடன் வசூல் ரீதியில் சாதனை பெற்று வருகின்றது. இந்த திரைப்படம் ஜப்பானில் ரிலீஸாக போவதாக தகவல்கள்  வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வருகின்றது.


சசிகுமார் மற்றும் சிம்ரன் நடிப்பில் வெளியான இந்த திரைப்படத்தினை அறிமுக இயக்குநர் அபிஷன் ஜிவந்த்  இயக்கியுள்ளார். இந்த திரைப்படத்திற்கு சீன் ரோல்டன் இசையைமைத்துள்ளர். இந்தப்படத்தில் மிதுன் ஜெய் சங்கர் மற்றும் கமலேஷ்,யோகி பாபு, எம்.எஸ். பாஸ்கர், ரமேஷ் திலக், பகவதி பெருமாள், இளங்கோ குமாரவேல், ஸ்ரீஜா ரவி எனப் பலர் நடித்துள்ளனர்.


அந்த வகையில்  "டூரிஸ்ட் பாமிலி " திரைப்படம் ஜப்பானில் மே 24ஆம் திகதி வெளியாக உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளான. ஜப்பானில் வாழும் தமிழ் சினிமா ரசிகர்களுக்கு பெரும் மகிழ்ச்சியினை ஏற்படுத்தி உள்ளதாக சமூக வலைத்தள பக்கத்தில் கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.


Advertisement

Advertisement