• May 18 2024

ரஜினி முகத்தில் காரி துப்பிய கதாநாயகி...அதிர்ந்து போன படக்குழு!... என்ன நடந்திச்சு தெரியுமா?

ammu / 1 year ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் நடிகர் ரஜினிகாந்த் சூப்பர் ஸ்டாராக எப்போதும் வலம் வந்து கொண்டிருக்கிறார். இவரின் படத்துக்குத் தான் பல நடிகர்களும் போட்டி போட்டு வருகின்றனர். சினிமாவில் கஷ்டப்பட்டு நுழைந்த இவர்  துவக்கத்தில் சின்ன சின்ன வேடங்களில் நடித்து வந்தார். 


ஒரு கட்டத்தில் ஆக்‌ஷன் ஹீரோவாக மாறியவர் நடிகர் ரஜினி. இவர் நடித்து வெளியான 95 சதவீத திரைப்படங்கள் வெற்றியை பெற்றது. அதனால் தான் அவருக்கு சூப்பர் ஸ்டார் என்கிற பட்டம் கிடைத்தது.


ரஜினியின் முகத்தில் காரி துப்பிய ஸ்ரீதேவி ஆம் உண்மையிலே இது நடந்துள்ளது. பாராதிராஜா இயக்கத்தில் தோன்றிய 16 வயதினிலே படத்தில் ரஜினி நடித்திருந்தார். இவருடன் கமலும் நடித்திருந்தார். இந்த படத்தின் மூலம் தான் ஸ்ரீதேவி அறிமுகமானார். 


இந்த படத்தில் ரஜினியின் முகத்தில் ஸ்ரீதேவி காரி துப்புவது போல் ஒரு காட்சி அமைந்திருக்கும். ஸ்ரீதேவி துப்புவது போல் நடிக்க, ரஜினியின் முகத்தில் சோப்பு நுரை வைத்து எச்சில் போல் எடுத்துள்ளனர். ஆனால் அது சரியாக வரவில்லை. 


என்னென்னவோ செய்தும் அந்த காட்சியில் பாரதிராஜாவுக்கு திருப்தி இல்லை. ஒருகட்டத்தில் "அந்த பொண்ணை என்னை உண்மையாகவே துப்ப சொல்லுங்கள். அதுதான் சரியாக வரும்’ என ரஜினி சொல்ல அப்படியே அந்த காட்சி எடுக்கப்பட்டது.


Advertisement

Advertisement