• Jan 19 2025

பணப்பெட்டியுடன் வெளியேறிய பூர்ணிமாவுக்கு கிடைத்த மொத்த சம்பளம் எவ்வளவு தெரியுமா?

Aathira / 1 year ago

Advertisement

Listen News!

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகின்ற  நிகழ்ச்சியில் பலராலும் பார்க்கப்படுகின்ற நிகழ்ச்சி தான் பிக்பாஸ். தற்பொழுது பிக்பாஸ் 7  நிகழ்ச்சி கடந்த அக்டோபர் 1ம் திகதி தொடங்கப்பட்டு 97 நாட்களை கடந்துவிட்டது.

முந்தைய சீசன்களில் இல்லாத வகையில் புது புது விஷயங்களை கொண்டு வந்திருந்தாங்க.தற்போது பிக்பாஸ் வீட்டில் அனைவரும் எதிர்ப்பார்த்த பணப்பெட்டி டாஸ்க்கில் 16 லட்சங்களை எடுத்துக் கொண்டு பூர்ணிமா சிமார்ட் ஆக வெளியேறி இருந்தார்.

இந்த நிலையில், பிக் பாஸ் வீட்டில் 94 நாட்கள் இருந்த பூர்ணிமா ரவியின் மொத்த சம்பள விபரம் வெளியாகியுள்ளது.


அதன்படி, பிக் பாஸ் நிகழ்ச்சியில் பூர்ணிமாக்கு ஒரு நாள் சம்பளமா 15000 ரூபா பேசப்பட்டுள்ளது. அதிலயும்  பிக்பாஸ் வீட்டுக்குள்ள 94 நாட்கள் இருந்திருக்காங்க.ஆக மொத்தமாக அவங்களுக்கு 14 லட்சம் சம்பளமாக கிடைக்கும். அதிலயும் பூர்ணிமா 16 லட்சம் பணப்பெட்டியும் எடுத்திருக்காங்க. இப்ப பூர்ணிமா 30 லட்சம் சம்பாதிச்சிருக்காங்க என்று  தான் சொல்லவேணும்.

அதிலும் குறிப்பாக பிக் பாஸ் வெற்றியாளரா வருபவருக்கு 50 லட்சம் கிடைக்கும். அதோட சேர்த்து  நிகழ்ச்சியில் கலந்து கொண்ட நிறுவனங்களும் பணம் கொடுப்பார்கள்.runner up ஆக வருபவருக்கு கூட பூர்ணிமாக்கு கிடைத்த பணம் வருமா என்று கூட தெரியவில்லை.

அதனால் பூர்ணிமா எடுத்த முடிவு சரி தான் என்று எல்லோரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

Advertisement

Advertisement