• May 19 2024

அம்பேத்கர்,காமராஜர்,பெரியார்,ஆகியோரை சொன்ன விஜய் எம்.ஜி.ஆர் பற்றி சொல்லாமல் விட்டதற்கு என்ன காரணம் தெரியுமா?

stella / 11 months ago

Advertisement

Listen News!

விஜய் நடித்து வரும் லியோ திரைப்படம் அக்டோபர் 19ம் தேதி வெளியாகவுள்ளது.இப்படத்தின் படப்பிடிப்பு இன்னும் சில வாரங்களில் முடிவடையும் என்று நம்பப்படுகின்றது.இந்நிலையில், விஜய்யின் பிறந்தநாளில் லியோ ஃபர்ஸ்ட் சிங்கிள் வெளியாகும் என அபிஸியல் அப்டேட் வந்துவிட்டது அதனைத் தொடர்ந்து இன்று கல்வி விருது வழங்கும் விழாவும் பிரம்மாண்டமாக நடைபெற்றது.

தொகுதி வாரியாக 10ம் வகுப்பு, 12ம் வகுப்பு மாணவ, மாணவியர்களில் முதல் மூன்று பேரை தேர்ந்தெடுத்து ஊக்கத் தொகை வழங்கினார் விஜய். இந்நிகழ்ச்சியில் அரசியல் குறித்தும் ஒருசில வார்த்தைகள் பேசிய விஜய் ரசிகர்களுக்கும் சிக்னல் கொடுத்துள்ளார். இதனால், தமிழ்நாட்டு அரசியல் களமே விஜய்யின் மீது அதிக கவனம் செலுத்திவருகிறது.


2026 தேர்தலில் விஜய் களமிறங்கலாம் என அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். இந்நிலையில், லியோவில் நடித்து முடித்ததும் உடனடியாக தளபதி 68 படத்தின் சூட்டிங் தொடங்கிவிடலாம் என விஜய் முடிவெடுத்துள்ளாராம். ஏஜிஎஸ் தயாரிப்பில் வெங்கட் பிரபு இயக்கும் இந்தப் படம் பொலிட்டிக்கல் ஜானரில் இருக்கும் எனவும் சொல்லப்படுகிறது. 

அதேபோல், தளபதி 68 படத்திற்காக விஜய்க்கு ரூ.200 கோடி சம்பளம் கொடுக்கப்படவுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. மக்கள் இயக்கம் சார்பில் அடுத்தடுத்து பல பொதுநல நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறார் விஜய். இன்று நடைபெற்ற கல்வி விருது விழாவிற்காகவும் 2 கோடி செலவளித்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.


மேலும் இந்த நிகழ்வில் பேசிய விஜய் முடிஞ்ச வரைக்கும் எல்லார் பற்றியும் படிச்சு தெரிஞ்சுக்கோங்க அம்பேத்கர்,காமராஜர்,பெரியார், உள்ளிட்ட தலைவர்களை பற்றி நிறைய தெரிந்து கொள்ளுங்கள்" நல்ல நல்ல விஷயத்தை தெரிஞ்சுக்கோங்க மற்றது எல்லாத்தையும் விட்டிடுங்க. இது தான் இன்டைக்கான ரேக் கோம் மெசேஜ் என்றும் தெரிவித்திருந்தார்.

இதனால் தற்பொழுது புதுச் சர்ச்சையில் சிக்கியுள்ளார். அதாவது பொதுவாக திரைப்ப்பிரங்கள் அரசியல் என்று சொன்னாலே எம்.ஜி.ஆர் பற்றி தான் சொல்லுவாங்க ஆனால் விஜய் எம்.ஜி.ஆர் பற்றி சொல்லாமல் அம்பேத்கர்,காமராஜர்,பெரியார்,ஆகியோரைப் பற்றி மட்டும் தெரிந்து கொள்ள எதற்காக சொன்னார். எம்.ஜி.ஆர் பற்றி சொல்லாமல் போனதற்கு என்ன காரணம் என கேள்வி எழுந்துள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.


Advertisement

Advertisement