• Sep 21 2023

ஜெயிலர் படம் எப்படி இருக்கு தெரியுமா... முதல் விமர்சனத்தை முன் வைத்த பிரபலம்... அப்போ படம் தூள் பறக்க போகுது போல..!

Prema / 1 month ago

Advertisement

Listen News!

ரஜினிகாந்த் நடிப்பில், நெல்சன் இயக்கத்தில் தற்போது உருவாகி உள்ள 'ஜெயிலர்' திரைப்படத்தில் தமன்னா, மோகன்லால், சிவராஜ்குமார், ஷாக்கி ஷெராப், விநாயகன், யோகிபாபு உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். மேலும்  கிட்டத்தட்ட ஒன்றரை ஆண்டுகளுக்கு பிறகு ரஜினிகாந்தின் படம் வெளியாவதால் இப்படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் எக்கச்சக்கமான எதிர்பார்ப்பு நிலவி வருகிறது. 


அந்தவகையில் 'ஜெயிலர்' திரைப்படம்  உலகம் முழுவதும் வரும் 10-ஆம் தேதி ரிலீசாகிறது. அதிலும் குறிப்பாக அமெரிக்காவில் இப்போதே டிக்கெட் முன்பதிவுகள் தொடங்கி விட்டன. அத்தோட தமிழ்நாட்டில் 1,152 திரைகள் இருப்பதாகவும், அவை அனைத்திலும் ஜெயிலர் படத்தை திரையிட ஆர்வமாக இருப்பதாகவும், இதற்கு ரஜினிகாந்த் ஆவன செய்ய வேண்டும் என்றும் தியேட்டர் உரிமையாளர் சங்கம் தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டது. 


இந்த நிலையில் ஜெயிலர் படத்தின் முதல் விமர்சனம் தற்போது வெளியாகி வைரலாகி வருகின்றது. அந்தவகையில் வணிக ரீதியாக சிறப்பாக பேசப்படும் பிரபலங்கள் மத்தியில் இருந்து தான் இந்த விமர்சனம் வந்துள்ளது.


அந்தவகையில் இப்பதிவில் நெல்சன் மற்றும் ரஜினிகாந்த் இருவருமே ஜெயிலர் படத்தின் மூலம் கம்பேக் கொடுத்துள்ளதாக தெரிவிக்கினறனர். இவர்களே 'ஜெயிலர்' படத்திற்கு இப்படியான ஒரு பாசிட்டிவ் விமர்சனம் கொடுத்துள்ள நிலையில் இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்களுக்கு மென்மேலும் அதிகரித்துள்ளது.

இவர்கள் மட்டுமல்லாது மேலும் ஒரு சில பிரபலங்களும் தங்களது விமர்சனங்களை கூறி வருகின்றனர்.


Advertisement

Advertisement

Advertisement