• Jan 19 2025

திவ்யா துரைசாமிக்கு என்ன ஆச்சு? ட்ரிப் ஏற்றும் வீடியோவை பதிவு செய்ததால் அதிர்ச்சி..!

Sivalingam / 6 months ago

Advertisement

Listen News!


’குக் வித் கோமாளி’ சீசன் 5 நிகழ்ச்சியின் போட்டியாளர்களில் ஒருவரான திவ்யா துரைசாமி திடீரென தனது சமூக வலைதளத்தில் ட்ரிப் ஏற்றுவது போன்ற வீடியோ உள்ள நிலையில் ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்து அவருக்கு என்ன ஆச்சு என்ற கேள்வியை எழுப்பி வருகின்றனர்.

ஹரிஷ் கல்யாண் நடித்த ’இஸ்பேட் ராஜாவும் இதய ராணியும்’ என்ற திரைப்படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானவர் திவ்யா துரைசாமி. அதன் பின்னர் அவர் ’குற்றம் குற்றமே’ ’எதற்கும் துணிந்தவன்’ ’புளூ ஸ்டார்’ உள்ளிட்ட படங்களில் நடித்த நிலையில் தற்போது ’குக் வித் கோமாளி’ சீசன் 5 நிகழ்ச்சியில் கலந்து கொண்டு வருகிறார் என்பதும் அவர் இந்த நிகழ்ச்சியை கலகலப்பாகி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் இன்ஸ்டாகிராமில் ஆக்டிவாக இருக்கும் திவ்யா துரைசாமிக்கு ஆயிரக்கணக்கான ஃபாலோயர்கள் இருக்கும் நிலையில் சற்று முன் அவர் ட்ரிப் ஏற்றுவது போன்ற ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளார். இந்த வீடியோவில் அவர் கூறியிருப்பதாவது:

குளுதாதயோன், ஒரு சக்திவாய்ந்த ஆக்ஸிஜனேற்றி, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும். கல்லீரலை பாதுகாக்கும். உயிரணுக்களை பாதுகாக்கிறது. இது சரும ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது. கூடுதலாக, குளுதாதயோன் இளமையான தோற்றத்திற்கு உதவி செய்யும். ஒட்டுமொத்த ஆரோக்கியத்திற்கு நல்லது என்று கூறியுள்ளார்.

 முதலில் இந்த வீடியோவை பார்த்த ரசிகர்கள் அவரது உடல் நிலைக்கு ஏதோ கோளாறு என்று கவலைப்பட்ட நிலையில் அதன் பின்னர் அவரது விளக்கத்தை பார்த்து கலாய்த்து கமெண்ட் பதிவு செய்து வருகின்றனர்.



Advertisement

Advertisement