• Jan 18 2025

குட்டை டவுசரில் அமலா போல் கொடுத்த போஸை பார்த்தீங்களா? இது சக்திக்கான மந்திரமாம்

Aathira / 11 months ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் சிந்து சமவெளி என்னும் சர்ச்சைக்குரிய திரைப்படத்தில் நடித்ததன் மூலம் பிரபல்யமானவர் தான் நடிகை அமலாபால். 

எனினும், இவருக்கு நல்லதொரு அடையாளத்தை ஏற்படுத்திக் கொடுத்தது மைனா திரைப்படம் தான். இப்படத்தில் கிடைத்த வரவேற்பைத் தொடர்ந்து முன்னணி நடிகர்களுடன் நடிக்க ஆரம்பித்தார்.

மேலும் இயக்குநர் ஏ.எல். விஜய்க்கும்  இவருக்கும் கடந்த 2014ம் ஆண்டு திருமணம் நடந்தது. ஆனால் அவர்கள் இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக 3 ஆண்டுகளில் அவர்கள் இருவருக்கும் விவாகரத்தும் நடைபெற்றது. 


இதையடுத்து, கடந்த அக்டோபர் மாதம் தன்னுடைய நண்பரான ஜெகத் தேசாய் என்பவரைக் கரம்பிடித்தார். அவர்கள் திருமணம் செய்து கொண்ட ஒரு சில மாதங்களில் தான் கர்ப்பமாக இருப்பதாக அறிவித்தார் அமலா பால்.

அத்துடன், சமூக வலைத்தளங்களில் ஆக்டீவாக இருந்து வரும் அமலாபால் கர்ப்பமாக இருக்கும் புகைப்படத்தை பதிவிடுவதையும் வழக்கமாக வைத்துள்ளார்.


இந்த நிலையில், தற்போது மருத்துவரின் அறிவுரை படி ஒரு பாறை மீது அமர்ந்து உடல்பயிற்சி செய்யும் வீடியோவை வெளியிட்டுள்ளார்.

கர்ப்ப காலத்தில் இந்த மலசானா யோகம் செய்வதை நான் மிகுந்த மகிழ்ச்சியுடன் செய்வதாகவும், இது இடுப்பு சக்தியை அதிகரிக்கும் ஒரு மந்திரம் போல் செயல்படுவதாக அமலாபால் கூறியுள்ளார். 


அதேபோல் நீண்ட கடற்கரையில் நடைபயிற்சி செய்வது, வெறுங்காலுடன் சூரிய அஸ்தமனத்தை பார்ப்பது, கர்ப்ப குமட்டலுக்கு சிறந்த சிகிச்சையாக இருக்கும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். 


Advertisement

Advertisement