• Jan 18 2025

விஜய்யின் சைக்கிள் டிரைவர் வேலைக்கு வரலையா? தளபதியை கடுமையாக கலாய்த்த பிரபலம்

Aathira / 8 months ago

Advertisement

Listen News!

தமிழகத்தில் இன்றைய தினம் வாக்குப்பதிவு நடைபெற்று வருகின்றது. எப்போதுமே முதலாவது ஆளாக வாக்களிப்பதை வழமையாக கொண்ட அஜித் குமார் இன்றைய தினமும் தனது வாக்கை முதலாவதாக அளித்துள்ளார்.

இன்றைய தினம் நடைபெற்ற தேர்தலில் ஓட்டு போடுவதற்காக சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், குஷ்பூ, பிரபு, விஷால், சரத்குமார் ராதிகா, திரிஷா என தமிழ் சினிமாவின் பிரபல நடிகர்களும் தமது வாக்கை செலுத்திபுகைப்படங்களை வெளியிட்டிருந்தார்கள்.

இந்த நிலையில், கோட் பட ஷூட்டிங்கில் காணப்பட்ட நடிகர் விஜய்,  ஓட்டு போடுவதற்கு சற்று தாமதமாக வந்துள்ள நிலையில், அவரை மரண பங்கம்  படுத்தியுள்ளார் ப்ளூ சட்டை மாறன்.


அதாவது விஜயின் சைக்கிள் டிரைவர் வேலைக்கு வர தாமதம் என கிண்டலாக தனது எக்ஸ் தள பக்கத்தில் பகிர்ந்துள்ளார். இறுதியாக நடைபெற்ற தேர்தலுக்கு நடிகர் விஜய் சைக்கிளில் வந்த நிலையில், இன்றைய தினம் அவர் வர தாமதம் ஆனதால் இவ்வாறு குறிப்பிட்டு உள்ளார்.


தற்போது வெங்கட் பிரபு இயக்கும் கோட் படத்தில் விஜய் நடித்து  வருகின்றார். அந்த படத்தில் அப்பா, மகன் என இரண்டு கேரக்டர் இடம் பெறுவதாக கூறப்படுகிறது. இந்த படம் எதிர்வரும்  செப்டம்பர் 5ஆம் தேதி விநாயகர் சதுர்த்தி அன்று வெளியாகும் என படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement