• Sep 11 2025

சிறிய திரையிலிருந்து பெரிய திரையில்...!குமாரசம்பவம் மூலம் குமரன் தங்கராஜன் புதிய அவதாரம்!

Roshika / 3 weeks ago

Advertisement

Listen News!

'பாண்டியன் ஸ்டோர்ஸ்' சீரியலின் மூலமாக பெரும் ரசிகர் வரவேற்பை பெற்ற நடிகர் குமரன் தங்கராஜன், இப்போது வெள்ளித்திரையில் முதல்முறையாக கதாநாயகனாக களமிறங்கியுள்ளார். இவர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் திரைப்படம் ‘குமாரசம்பவம்’ என்ற தலைப்பில் உருவாகியுள்ளது.


இந்த படத்தை நடிகரும் இயக்குநருமான பாலாஜி வேனுகோபால் இயக்கியுள்ளார். வீனஸ் இன்ஃபொடெயின்மெண்ட் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்தில், குமரனுக்கு துணையாக குமரவேல், பாலசரவணன், ஜி.எம். குமார், வினோத் சாகர், மற்றும் லிவிங்ஸ்டன் ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடித்துள்ளனர்.


காமெடியும், மனதை தொட்ட நெகிழ்ச்சியும் கலந்த ‘ஃபீல் குட்’ திரைப்படமாக இது உருவாகியுள்ளது. ரசிகர்களை மேலும் ரசிக்க வைக்கும் வகையில், இப்படத்தின் முதல் பாடல் ‘விடியாத இரவொன்று…’ என்ற சிங்கிள் சமீபத்தில் வெளியிடப்பட்டுள்ளது. பாடலுக்கு இசை அமைத்துள்ளவர் அச்சு ராஜமணி. இசையில் மட்டுமன்றி, படம் முழுவதும் கண்ணைப் கவரும் ஒளிப்பதிவை ஜெகதீஷ் கவனித்துள்ளார்.

'யாத்திசை' படத்தை தயாரித்த அதே நிறுவனம் இம்முறை ‘குமாரசம்பவம்’ மூலம் வெற்றி பாராட்டை எதிர்நோக்கி உள்ளது. இப்படத்தின் ரிலீஸ் தேதி விரைவில் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்படவுள்ளது.

Advertisement

Advertisement