• May 18 2025

மாமியாரிடம் இருந்து வந்த மெசேஜ்..! ரவி மோகன் பதிலளித்தாரா..? இல்லையா...?

Mathumitha / 3 hours ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் பலகோடி ரசிகைகளின் கனவுக்கண்ணனாக இருந்த ரவிமோகன் தற்போது தனது சொந்த வாழ்க்கையில் பல பிரச்சனைகளை சந்தித்து வருகின்றார். சமீபத்தில் இவர் ஐசரி கணேஷ் மகள் திருமணத்திற்கு தனது நெருங்கிய நண்பி ஜெனிஷாவுடன் கைகோர்த்து வந்து பலரது விமர்சனங்களுக்கு உள்ளானார்.


இதனை தொடர்ந்து ரவிமோகனின் மனைவி ஆர்த்தி ரவி அவர் மீது குற்றம் சுமத்தி ஒரு அறிக்கையினை வெளியிட்டு இருந்தார். பின்னர் ரவி தன் மீது தவறு இல்லை என பதிலறிக்கை வெளியிட்டு இருந்தார். தற்போது ரவிமோகனின் மாமியார் தன் மீது சுமத்தப்பட்ட குற்றங்களுக்கு முற்றுபுள்ளி வைக்கும் வகையில் ஒரு அறிக்கையை வெளியிட்டு இருந்தார்.


அதாவது நான் சுந்தர்சியை வைத்து  "வீராப்பு" திரைப்படத்தினை தயாரித்தேன். அந்த படம் எனக்கு நல்ல வரவேப்பை பெற்று தந்து. இதனை தொடர்ந்து என்னுடைய மாப்பிளை ரவி தன்னை வைத்து திரைப்படத்தினை தயாரிக்க வேண்டும் என்ற ஆலோசனையால் அடுத்து அடுத்து திரைப்படங்களை தயாரிக்க வேண்டிய சூழலுக்கு தள்ளப்பட்டிருந்தேன் என்றும்  அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருந்தது. மேலும் அடங்கமாறு,பூமி மற்றும் சைரன் என அடுத்தது திரைப்படங்களை கதாநாயகனாக வைத்து தயாரித்தேன். அந்த படங்களுக்கு விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பை பெற்ற போதிலும் வசூல் ரீதியில் வெற்றி அளிக்கவில்லை. இந்த திரைப்படத்திற்காக 100 கோடிக்கு மேல் கடன் வாங்கியதாகவும் குறிப்பிட்டிருந்தார். அந்த பணத்தில் அவருக்கு சேர வேண்டிய சம்பளத்தினை கொடுத்து விடுவேன் என்றும் அதற்கான ஆதாரங்கள் என்னிடம் உள்ளன என்றும் குறிப்பிட்டிருந்தார். 


இப்போது அந்த படத்திற்காக நான் வேண்டிய கடனை பொறுப்பு ஏற்க சொன்னதாக குற்றம்சாட்டி உள்ளார். இதில் கொஞ்சம் கூட உண்மை இல்லை. பைனான்சியர்கள் நீட்டும் எல்லா பாத்திரத்திலும் கையொப்பமிட்டு கோடி ரூபாய் நஷ்டத்தையும் மன உளைச்சலையும் நான் மட்டுமே ஏற்றுக்கொண்டேன்.அப்படி அவரிடம் நான் பொறுப்பு ஏற்க சொன்னதற்கான ஆதரங்களை காட்டுமாறும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் என்னுடைய குடும்பத்துக்காக மட்டும் தான் பொறுமையாக இருந்தாகவும் கூறியுள்ளார். அதுமட்டுமல்லாமல் சமூக வைத்தளத்தில் கூறப்படுவது போல கொடுமைக்கார மாமியார், மகளின் குடும்பத்தை பிரித்தவள், பணப்பேய் என பல குற்றங்களை சுமத்தாதீர்கள். நான் ஏற்கனவே எனது மகள் வாழ வெட்டியாக பார்க்கும் துயரத்தில் இருக்கின்றேன். நீங்களும் என்னை மனவேதனைக்கு உள்ளக்காதீர்கள் என்றும் கூறியிருந்தார். 


இந்த அறிக்கையின் பின்னர் தற்போது ஒரு செய்தி வெளியாகியுள்ளது. அதாவது கடன் தொகையை திருப்ப கேட்பதற்காகவும் மகளையும் மருமகனையும் ஒன்றாக சேர்ப்பதற்காக நான் ஒரு கிழமைக்கு முன்னர் ரவிக்கு ஒரு மெசேஜ் அனுப்பியிருந்தேன் அதனை தவறாக தன்னை மிரட்டுவதற்காக செய்தி அனுப்புவதாக கூறி இருந்தார். ஆனாலும் இந்த அறிக்கைக்கு ரவிமோகன் இன்னும் பதிலறிக்கை வெளியிடவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement