• May 19 2024

ரஜினிகாந்த் வீட்டிற்கருகில் தனுஷின் புதிய வீடு- மதிப்பு மட்டும் இத்தனை கோடியா…!

Aishu / 1 year ago

Advertisement

Listen News!

கடந்த 2002ஆம் ஆண்டு செல்வராகவன் இயக்கத்தில் வெளியான துள்ளுவதோ இளமை என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகர் தனுஷ். இவருடைய முதல் படத்தின் வெற்றியை தொடர்ந்து இவருக்கு படவாய்ப்புகள் அதிகமாக குவிய தொடங்கின.

தொடர்ந்து காதல் கொண்டேன், திருடா திருடி, தேவதைகண்டேன் போன்ற பல படங்களில் நடித்தார். தன்னுடைய இயல்பான நடிப்பினால் பல ரசிகர்களை கவர்ந்த இவர் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக கலக்கி வருகிறார்.

இவர் நடிகராக மட்டுமன்றி திரைப்பட தயாரிப்பாளர், பின்னணிப் பாடகர், பாடலாசிரியர் ,திரைக்கதையாசிரியர், இயக்குநர் என பல்துறை திறமை கொண்டவராக விளங்குகின்றார்.

ஹாலிவுட் திரையுலகின் முன்னணி நடிகர்களுடன் இவர் நடித்துள்ள The Gray Man திரைப்படம் ரசிகர்களிடத்தில் பெருமளவு பேசப்பட்டது.இவர் நடிப்பில் அடுத்தடுத்து வாத்தி, திருச்சிற்றம்பலம் உள்ளிட்ட சில முக்கிய திரைப்படங்களும் வெளியாக இருக்கின்றன.

இந்நிலையில் நடிகர் தனுஷ் கட்டி வரும் பிரம்மாண்ட வீட்டு குறித்த சில முக்கிய தகவல் தெரிய வந்துள்ளன.

சென்னை முக்கிய நகரமான போயஸ் கார்டன்-ல் தான் அந்த வீட்டு கட்டப்பட்டு வருகிறது. அந்த வீட்டின் 90% வேலைகள் முடிந்துவிட்டதாம்.மேலும் இந்த வீட்டின் மதிப்பு மட்டும் ரூ. 150 கோடி அல்லது அதற்கு மேலும் செல்ல வாய்ப்பு இருப்பதாக சொல்லப்படுகிறது.

சமீபத்தில் தான் அந்த வீட்டில் நடிகர் தனுஷின் அப்பா-அம்மாவிற்கு 70-வது பிறந்தநாள் பூஜை நடைப்பெற்றுள்ளது.அத்தோடு நடிகர் ரஜினிகாந்த் வசிக்கும் வீட்டிற்கு மிக அருகில் தான் தனுஷ் கட்டிவரும் புதிய வீடும் அமைந்துள்ளது.மேலும் அந்த வீட்டின் பரப்பளவு மட்டும் 90,000 sq.ft இருக்குமாம்.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement