• Apr 27 2024

கவர்ச்சியை தாண்டி தர்ஷா குப்தா இது எல்லாம் செய்யிறாங்களா..அவரே வெளியிட்ட வீடியோ..!

Aishu / 1 year ago

Advertisement

Listen News!

நடிகை தர்ஷா குப்தா, இன்ஸ்டாகிராமில் தொடர்ந்து கவர்ச்சி புகைப்படங்களை பதிவிட்டு வருவதை பார்த்து, உனக்கு கவர்ச்சியை தாண்டி என்ன தெரியும் என சிலர் கிண்டலடித்துள்ளளாளர்கள்.

சீரியல் நடிகையாக சின்னத்திரையில் அறிமுகமான நடிகை தர்ஷா குப்தா, குக் வித் கோமாளி நிகழ்ச்சி மூலம் மக்கள் மத்தியில் பேமஸ் ஆனார். இந்நிகழ்ச்சிக்கு பிறகு சமூக வலைதளங்களில் கவர்ச்சியாக போட்டோஷூட் நடத்தி அதன் புகைப்படங்களை பதிவிட்டு வந்த தர்ஷாவுக்கு சினிமாவிலும் அடுத்தடுத்து பட வாய்ப்புகள் குவிய ஆரம்பித்தது.


அந்த வகையில், இவர் கதாநாயகஅறிமுகமான படம் ருத்ரதாண்டவம். திரெளபதி படத்தின் இயக்குநர் மோகன் ஜி இயக்கியிருந்த இப்படத்தில் ரிஷிக்கு ஜோடியாக நடித்திருந்தார் தர்ஷா. முதல் படத்திலேயே இவரது நடிப்புக்கு பாராட்டுக்கள் கிடைத்தன. இதையடுத்து அவர் நடித்த படம் ஓ மை கோஸ்ட். மேலும் இப்படம் கடந்த வாரம் திரையரங்குகளில் ரிலீஸ் ஆனது.


சன்னி லியோன் கதையின் நாயகியாக நடித்திருந்த இப்படத்தில் தர்ஷா குப்தாவும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். திகில் கதையம்சம் கொண்ட இந்த படத்தில் தர்ஷா குப்தா பேயாகவும் நடித்துள்ளார். இவர் தொடர்ந்து இன்ஸ்டாகிராமில் கவர்ச்சி புகைப்படங்களை பதிவிட்டு வருவதை பார்த்து, உனக்கு கவர்ச்சியை தாண்டி என்ன தெரியும் என சிலர் கிண்டலடித்துள்ளனர்.


அவர்களுக்கெல்லாம் பதிலடி கொடுக்கும் விதமாக ஓ மை கோஸ்ட் படத்தில் தான் நடித்த ஸ்டண்ட் காட்சியின் மேக்கிங் வீடியோவை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார் தர்ஷா.  கவர்ச்சியை தாண்டி உங்களின் உழைப்பையும் நடிப்புத் திறனையும் காட்டுங்கள் என்று கூறிய அனைவருக்கும் இந்த ஓஎம்ஜி படத்தின், BTS வீடியோவை சமர்ப்பிக்கிறேன் என பதிவிட்டுள்ளார்.


அத்தோடு  அந்த காட்சி படமாக்கப்பட்டபோது காலையிலிருந்து மாலை 6 மணிவரை ஒரு சொட்டி தண்ணிகூட குடிக்கவில்லை என்று குறிப்பிட்டுள்ள அவர், கடின உழைப்பின்றி எதுவும் ஈஸியாக நடந்து விடாது என தன்னைப்பற்றி விமர்சனம் செய்தவர்களுக்கு தரமான பதிலடி கொடுத்துள்ளார்.




Advertisement

Advertisement

Advertisement