• Apr 27 2024

கரகாட்ட நடன கலைஞர்களுடன் டான்ஸ் ஆடி அசத்திய குக் வித் கோமாளி செஃப் தாமு.. வைரலாகி வரும் வீடியோ இதோ!

Jo / 11 months ago

Advertisement

Listen News!

விஜய் டிவி -இல் ஒளிபரப்பாகும் குக் வித் கோமாளி சீசன் 4 தற்போது நடைபெற்று வருகிறது. இதில் செஃப் வெங்கடேஷ் பட் மற்றும் செஃப் தாமு இருவரும் நடுவர்களாக இருந்து வருகிறார்கள்.

இதுவரை நடைபெற்ற அனைத்து குக் வித் கோமாளி சீசன்களிலும் இவர்கள் இருவரும் தான் நடுவர்களாக பணிபுரிந்து வருகிறார்கள். நடுவர்கள் என்றாலும் கூட அனைவருடனும் நகைச்சுவையாக பேசிக்கொண்டு, அனைவரிடமும் அன்பாக இருந்து வருகிறார்கள்.

இதில் செஃப் தாமு சமூக வலைத்தளத்தில் அடிக்கடி தன்னுடைய புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை பதிவிட்டு வருகிறார். வாரிசு படத்தின் பாடலுக்கு இவர் நடனமாடி வெளியிட்ட வீடியோ கூட படுவைரலானது.

அந்த வகையில் தற்போது கரகாட்ட நடன கலைஞர்களுடன்செஃப் தாமு நடனமாடிய வீடியோ வெளியாகியுள்ளது. வரும் வாரம் குக் வித் கோமாளி கிராமத்தில் நடைபெறவுள்ளது. அதற்கான ப்ரோமோ கூட வெளிவந்துள்ளது.கிராமத்து எபிசோட் ஷூட்டிங் போதுதான் செஃப் தாமு கரகாட்ட நடன கலைஞர்களுடன் நடனமாடி இந்த வீடியோவை வெளியிட்டுள்ளார். 


 

Advertisement

Advertisement

Advertisement