• Feb 05 2025

உங்கள் காதல் விஷயம் தெரியும்! கீர்த்தியை வித்தியாசமாய் வாழ்த்திய பிரபலங்கள்!

subiththira / 1 month ago

Advertisement

Listen News!

நடிகை கேர்த்தி சுரேஷ் மற்றும் ஆண்டனிக்கு சமீபத்தில் திருமணம் முடிந்த நிலையில் பிரபலங்கள் பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் வாழை திரைப்படத்தின் இயக்குநர் மாரிசெல்வராஜ் மற்றும் நடிகர் சூரி ஆகியோர் புதுமணத் தம்பதிகளை வாழ்த்தி அழகிய புகைப்படங்களை பகிர்ந்துள்ளனர்.


நடிகை கீர்த்தி தற்போது அட்லி தயாரிப்பில் உருவான 'பேபிஜான்' இந்தி ரீமேக்கில் நடித்து முடிந்துள்ளார். இந்த படத்தின் ரிலீசுக்கு இன்னும் 2நாட்களே உள்ள நிலையில் ப்ரோமோஷன் நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டு வருகிறார். இந்நிலையில் இவரின் திருமணம் குறித்து வாழ்த்திய இயக்குநர் மாரிசெல்வராஜ் "இந்த தருணத்திற்காக நீங்கள் நீண்ட காலமாக காத்திருந்தீர்கள் என்று எனக்குத் தெரியும். அது இறுதியாக நடந்து விட்டது. உங்களுக்காக நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன். உங்கள் அன்பு எல்லா மகிழ்ச்சியாலும் கொண்டாட்டங்களாலும் நிரப்பப்படட்டும்" என்று வாழ்த்தி கீர்த்தி-அண்டனியுடன் இருக்கும் புகைப்படத்தினை ஷேர் செய்துள்ளார் மாரிசெல்வராஜ். 

மேலும் கீர்த்தியின் திருமணத்தில் கலந்து கொண்ட  நடிகர் சூரி அப்போது எடுக்கப்பட்ட புகைப்படத்தினை பகிர்ந்து "என் செல்ல தங்கை மற்றும் அன்பு மாப்பிள்ளை, உங்கள் மணவாழ்வு என்றும் மகிழ்ச்சியும் நேசமும் நிரம்பி, அழகான நினைவுகளால் நிறைந்ததாய் தொடரட்டும். ஒருவருக்கொருவர் உறுதுணையாக இருந்து வாழ வாழ்த்துக்கள்" என்று தனது இன்ஸராகிறேம் பக்கத்தில் ஷேர் செய்துள்ளார். இந்த புகைப்படங்கள் தற்போது வைரலாகி வருகிறது. இதோ அந்த புகைப்படங்கள்.

Advertisement

Advertisement