• Apr 02 2025

புகழ்பெற்ற ஹாலிவுட் இயக்குநர் திடீர் மறைவு! பிரபலங்கள் இரங்கல்..!

subiththira / 2 months ago

Advertisement

Listen News!

புகழ்பெற்ற ஹாலிவுட் இயக்குநராக இருந்தவர்  இயக்குநர் டேவிட் லின்ச். இவர் உடல் நலக்குறைவு காரணமாக  அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சலசில் இன்று காலமானார்.  இவரின் இறப்பு செய்தியை குடும்பத்தினர் தெரிவித்ததை அடுத்து பிரபலங்கள் ரசிகர்கள் என அனைவரும் இரங்கல் தெரிவித்து வருகிறார்கள். 


டேவிட் லின்ச் தனித்துவமான, தொலைநோக்கு சிந்தனைக் கொண்ட ஒரு சிறந்த இயக்குநர். இவர் 'புளு வெல்வெட்' படத்திற்காக ஆஸ்கர் பரிந்துரைக்கப்பட்டார். தொடர்ந்து விருதுகள் பெற இவர் மேலும் 2019ம் ஆண்டில் வாழ்நாள் சாதனையாளருக்கான அகாடமி விருதைப் பெற்றார்.


இந்நிலையில் லின்சின் குடும்பத்தினர் அவரது அதிகாரபூர்வ பேஸ்புக் பக்கத்தில் ஒரு அறிக்கை மூலம் அவரது மரணத்தை அறிவித்தனர். அந்த அறிக்கையில், 'இப்போது அவர் எங்களுடன் இல்லாததால் உலகில் ஒரு பெரிய ஓட்டை உருவாகியுள்ளது. ஆனால், அவர் சொல்வது போல். உங்கள் கண்ணை டோனட்டின் மீது வைத்திருங்கள். ஓட்டை மீது அல்ல' என்று குறிப்பிட்டு லின்ச் மரணம் குறித்து உருக்கமாக பதிவிட்டுள்ளனர். இவரின் மறைவிற்கு ரசிகர்கள், பிரபலங்கள் என பலரும் இரங்கல் தெரிவித்து வருகிறார்கள்.


Advertisement

Advertisement