• May 18 2024

விஷ்ணுவுக்கு குறும்படம் போட்டுக்காட்டிய பிக்பாஸ் வெறியர்கள்! சும்மா அதிருதுல்ல...!

Aathira / 6 months ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் சீசன் 7 நிகழ்ச்சி தற்போது நாளுக்கு நாள் மேலும் சூடு பிடிக்கின்றது. அதிலும் சனி, ஞாயிறு கமல் தொகுத்து வழங்கும் காட்சியை  பார்ப்பதற்கென தனி ரசிகர் கூட்டமே காத்திருக்கும்.

தமிழில் மட்டுமல்லாமல் தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி என பிராந்திய மொழிகளிலும் பிக்பாஸ் நிகழ்ச்சி நடத்தப்பட்டு வருகிறது.

இதில் கலந்து கொண்ட பிரபலங்களுக்கு பிரபலத்தோடு சினிமாவில் நடிப்பதற்கான வாய்ப்பும் கிடைப்பதால், சினிமாவில் நடிக்க விரும்பும் நடிகர்கள் இந்த நிகழ்ச்சியில் அதிக கவனம் செலுத்தி வருகின்றனர். 

இந்த நிலையில், பிக்பாஸ் நிகழ்ச்சியில் 'பேட்டரி டென்' டாஸ்க்கில் விஷ்ணு அக்ஷயாவிடம் நடந்து கொண்ட விதம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.


இவ்வாறான நிலையில், இந்த வாரம் பிக்பாஸ் வீட்டில் கமல்ஹாசன் குறும்படம் போட்டு உண்மையை  போட்டியாளர்களிடம் கூறுவார் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.

அத்துடன், இறுதி நாட்களுக்கு  முதல் நடைபெற்ற 'பேட்டரி டென்' டாஸ்க்கில் போட்டியாளர்கள் குறைவான சார்ஜிங் சாக்கெட்டை கைப்பற்றி போனை சார்ஜிங் போடுவது இலக்காக கொடுக்கப்பட்டது.

இதையடுத்து, பிக்பாஸ் வீட்டிலுள்ள போட்டியாளர்கள் ஓடிவந்து சார்ஜிங் சாக்கெட்டை கைப்பற்ற முயன்றனர். இதில் தன்னை தள்ளி விட்டதாக விஷ்ணு அக்ஷயா மீது கோபப்பட அவரை நிக்சன் திட்டுகிறார். இவர்களை சமாதானப்படுத்தும் முயற்சியில் பிரதீப் உள்ளிட்ட மற்ற போட்டியாளர்களும் சண்டையிடுவதாக அமைந்துள்ளது.

இதையடுத்து, அக்ஷயாவும் தனது பக்கமுள்ள நியாயத்தை குறித்து விளக்கம் கொடுக்கிறார். எனினும் அதை விஷ்னு ஏற்று கொள்ளவில்லை.

இவ்வாறான நிலையிலே தான் இங்கு இடம்பெற்ற குழப்பத்திற்கு நிச்சயம் கமல்ஹாசன் குறும்படம் போட்டு விளக்கம் கொடுப்பார் என்று ரசிகர்கள் மத்தியில் எதிர்ப்பார்க்கப்படுகின்றது.

எனினும், பிக்பாஸ் வீட்டிலுள்ள போட்டியாளர்கள் தொடர்பில் கமல் ஹாசன் குறும்படம் போடுவதற்கு முன்பு ஏராளமான ரசிகர்கள் இணையத்தில் குறும்படம் ஒன்றை வெளியிட்டுள்ளனர். இந்த காணொளி இணையத்தினை ஆக்கிரமித்து வருகின்றது.அதன்படி குறித்த காணொளி வருமாறு...


Advertisement

Advertisement