• May 18 2024

காட்டுக்குள் அதிதியுடன் குத்தாட்டம் போட்ட பிகில் பாண்டியம்மா-தீயாய் பரவும் வீடியோ..!

Aishu / 1 year ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் காலத்திற்கு காலம் பல்வேறு நடிகர், நடிகைகளும் அறிமுகமான வண்ணம் தான் இருக்கின்றனர். அந்தவகையில் பிரபல இயக்குநர்களில் ஒருவரான ஷங்கரின் இளைய மகளான அதிதியும் தற்போது சினிமாவில் நடிகையாக அறிமுகமாகி உள்ளார். அவர் நடிப்பில் உருவான முதல் படம் 'விருமன்'. இப்படத்தில் கார்த்திக்கு ஜோடியாக நடித்திருந்தார். முத்தையா இயக்கத்தில் உருவாகி இருந்த இப்படத்தை சூர்யாவின் 2டி நிறுவனம் பிரம்மாண்டமாக தயாரித்திருந்தது.

மேலும் 'விருமன்' திரைப்படமானது கடந்த சில தினங்களுக்கு முன்னர் திரையரங்குகளில் வெளியாகி இருந்தது. பலத்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் ரிலீசான இப்படம் மக்கள் மத்தியில் அமோக வரவேற்பையும், வசூலையும் பெற்று வருகின்றது. இப்படம் ரிலீசான முதல் நாளே ரூ.8 கோடிக்கு மேல் வசூலித்து சாதனை படைத்தது. அடுத்தடுத்த நாட்களிலும் தொடர்ந்து வசூலை வாரிக் குவித்து வெற்றி நடை போட்டு வருகின்றது.

இந்நிலையில் அறிமுக நடிகையான அதிதிக்கும் அதிர்ஷ்டமான படமாக இது அமைந்திருக்கின்றது. இப்படத்தின் அதிதியின் நடிப்புக்கும், நடனத்துக்கும் பல பிரபலங்களிடமிருந்து பாராட்டுக்களும் வாழ்த்துக்களும் குவிந்த வண்ணமே  உள்ளன. அதுமட்டுமன்றி முதல் படத்திலேயே அவருக்கென ரசிகர் கூட்டம் உருவாகி ரசிகர் மன்றம் தொடங்கிய நிகழ்வுகளும் அரங்கேறி உள்ளன. 

அத்தோடு அடுத்த படத்திற்கும் இவர் கெமிட்டாகி உள்ளார்.அதாவது சிவகார்த்தியேனுக்கு ஜோடியாக மாவீரன் படத்தில் நடிக்கவுள்ளார்.இந்நிலையில் காட்டுக்குள் இவரும் பிகில் பாண்டியம்மாவும் குத்தாட்டம் போட்டுள்ளனர்.அது இணையத்தில் வைரலாகி வருகின்றது.

இதோ அந்த வீடியோ...




Advertisement

Advertisement