• Apr 03 2025

உன் மச்சானுக்கும் மச்சினிக்கும் எல்லாருக்கும் பேபே... அலப்பறையை கிளப்பிய சூது கவ்வும் 2 டீசர்

Aathira / 1 year ago

Advertisement

Listen News!

நலன் குமாரசுவாமி இயக்கத்தில், விஜய் சேதுபதி, பாபி சிம்ஹா, அசோக் செல்வன், கருணாகரன், சஞ்சிதா ஷெட்டி, எம்.எஸ் பாஸ்கர் போன்ற பலர் நடிப்பில் வெளியான திரைப்படம் தான் சூது கவ்வும்.

இந்த படத்தின் இரண்டாம் பாகத்தை அர்ஜுன் என்பவர் இயக்கியுள்ளார். இதில் ஹீரோவாக மிர்ச்சி சிவா நடித்துள்ளார். சூது கவ்வும் படத்தைப் போலவே இந்த படத்திலும் மிர்ச்சி சிவாவின் கதாபாத்திரம் ஹீரோயினை காதலிப்பதாக உருவாக்கப்பட்டுள்ளது.


இந்த நிலையில், சற்றுமுன் வெளியான சூது கவ்வும் 2 படத்தின் டீசர் இறுதியில் மிர்ச்சி சிவாவிடம், நீயும் எவ்ளோ நாள் தான் கனவுளையே காதலிச்சிட்டு இருப்பா, நிஜத்தில அந்த பொண்ண தூக்கிட்டு வந்து சந்தோஷமா வாழலாமே என ஒருவர் சொல்ல, அதற்கு சிவா, பொண்ணுங்களோட கனவுல தான் சந்தோசமா வாழ முடியும். கல்யாணம் ஆனா நிஜத்தில் சந்தோஷமா இருக்கவே முடியாது என அலப்பறையை கிளப்பியுள்ளார் சிவா. 


Advertisement

Advertisement