• Apr 27 2024

வசூலில் சிகரம் தொட்ட 'ஜவான்'... சந்தோஷத்தில் அட்லீ வெளியிட்ட பதிவு..!

Prema / 7 months ago

Advertisement

Listen News!

பாலிவுட் சினிமாவில் முதன்முறையாக காலடி எடுத்து வைத்துள்ள அட்லீ இயக்கத்தில் உருவாகி உள்ள திரைப்படம் 'ஜவான்'. இப்படத்தில் ஹீரோவாக ஷாருக்கான் நடித்துள்ளார். அத்தோடு நயன்தாரா, விஜய் சேதுபதி இருவரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.


அதுமட்டுமல்லாது தீபிகா படுகோன், சஞ்சய் தத் ஆகியோர் கவுரவ தோற்றத்தில் நடித்துள்ளனர். மேலும் இப்படத்திற்கு அனிருத் இசை அமைத்துள்ளார். அந்தவகையில் இந்தி, தமிழ், தெலுங்கு மொழிகளில் உருவாகும் இப்படம் கடந்த செப்டம்பர் 7-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகி இருக்கின்றது. 


இப்படம் வெளியாகி ஒருபக்கம் பாசிட்டிவ் விமர்சனம் அதிகம் எழுந்தாலும் நெகட்டிவ் விமர்சனமும் பேசப்பட்டு வருகின்றது. இவ்வாறாக கலவையான விமர்சனங்களை பெற்று வருகின்ற ஜவான் படமானது வசூலிலும் மாஸ் காட்டி வருகின்றது.


இந்நிலையில் இப்படமானது முதல்நாள் வசூல் விகிதத்திலும் வரலாறு காணாத அளவிற்கு சாதனை படைத்துள்ளது. அந்தவகையில் ஜவான் படத்தின் ஹிந்தி வர்ஷனில் ஒரு நாள் வசூல் 68.72 கோடியை எட்டியுள்ளது. அதே போன்று உலகளவில் ஒரு நாள் வசூலாக 144.22 கோடி வசூலித்து இதுவரையில் எந்த படமும் செய்யாத மாபெரும் சாதனையை ஜவான் செய்தித்துள்ளது. 

இந்த சந்தோஷமான விஷயத்தை அட்லீ தனது சமூக வலைத்தளங்களில் பகிர்ந்துள்ளார்.


Advertisement

Advertisement

Advertisement