• May 22 2024

அருண்ராஜா காமராஜ் இயக்கும் அடுத்த படம்.. ‘லால்சலாம்’ நடிகர் ஹீரோவா?

Sivalingam / 3 months ago

Advertisement

Listen News!

 தமிழ் திரையுலகின் முன்னணி இயக்குனர்களில் ஒருவரான அருண்ராஜா காமராஜ் இயக்க இருக்கும் அடுத்த திரைப்படத்தில் ’லால் சலாம்’ படத்தில் முக்கிய கேரக்டரில் நடித்த நடிகர் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.  

சிவகார்த்திகேயன் நடித்து தயாரித்த ’கனா’ என்ற படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானவர் அருண்ராஜா காமராஜ். அதற்கு முன்னர் ரஜினி, விஜய் படங்கள் உள்பட பல படங்களுக்கு பாடல்கள் எழுதிக் கொண்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் ’கனா’ வெற்றி படத்தை அடுத்து உதயநிதி ஸ்டாலின் நடித்த 'நெஞ்சுக்கு நீதி’ என்ற படத்தை இயக்கிய அருண்ராஜா, அதன் பின்னர் ஹாட்ஸ்டாரில் ஒளிபரப்பான ’லேபிள்’ என்ற தொடரை இயக்கினார் என்பதும் அந்த தொடர் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.



இந்த நிலையில் அருண்ராஜா காமராஜ் இயக்க இருக்கும் அடுத்த படம் குறித்த தகவல் கசிந்து உள்ள நிலையில் இந்த படத்தில் விஷ்ணு விஷால் நாயகனாக நடிக்க இருப்பதாக தெரிகிறது. ’லால் சலாம்’ திரைப்படத்தை அடுத்து ஏற்கனவே கோகுல் இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்க விஷ்ணு விஷால் முடிவு செய்திருக்கும் நிலையில் தற்போது அருண்ராஜா காமராஜ் இயக்கும் படத்தில் நடிக்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.  

விஷ்ணு விஷால் மற்றும் அருண்ராஜா இணையும் இந்த படத்தை ரோமியோ பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்க இருப்பதாகவும் இந்த படத்தில் நடிக்கும் நடிகர் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் தேர்வு நடைபெற்று வருவதாகவும் கூறப்படுகிறது.

Advertisement

Advertisement