• Jan 18 2025

பிக்பாஸ் டைட்டில் வின்னருக்கு ஆசிட் வீசுவதாக மிரட்டல்! பரபரப்பு புகாரை வெளியிட்ட அர்ச்சனா

Aathira / 1 month ago

Advertisement

Listen News!

பிக் பாஸ் நிகழ்ச்சியின் எட்டாவது சீசனில் போட்டியாளராக கலந்து கொண்டவர் தான் அருண் பிரசாத். இவர் கடந்த சீசனில் டைட்டில் வின்னராக வெற்றி பெற்ற அர்ச்சனாவை காதலித்து வருவதாக கூறப்படுகிறது.

சின்னத்திரை நடிகையும் பிக் பாஸ் சீசன் 7 டைட்டில் வின்னரும் ஆன அர்ச்சனா தற்போது பிக் பாஸ் வீட்டுக்குள் இருக்கும் அருண் பிரசாத்துக்கு தனது ஆதரவை வழங்கி வருகின்றார். இவர்கள் தொடர்பான புகைப்படங்களும் வீடியோக்களும் இணையத்தில் வைரல் ஆகி வருகின்றன.

பிக் பாஸ் வீட்டில் அருண் செய்யும் விஷயங்களுக்காக வெளியில் உள்ள அர்ச்சனாவை நெட்டிசன்கள் தொடர்ச்சியாக வறுத்தெடுத்து வருகின்றார்கள். இதனால் நானும் அருணும் வேறு வேறு நபர்கள். நான் கஷ்டப்பட்டு தான் வந்திருக்கின்றேன். அருணுக்கு ஒரு பிரண்டா நான் ஆதரவு கொடுக்கின்றேன். ஆனால் அவருடைய செயல்களுக்கு நான் பொறுப்பாக முடியாது என்று அர்ச்சனா கடந்த வாரம் பதிவிட்டு இருந்தார்.


இந்த நிலையில், அர்ச்சனா தற்போது தனது twitter பக்கத்தில் வெளியிட்ட புகார் ஒன்று மிகப்பெரிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 

அதாவது அர்ச்சனாவுக்கு மெசேஜ் மற்றும் கமெண்ட்களில்  அசிங்கம் அசிங்கமாக பேசுகின்றார்கள் என்றும் அவருக்கு ஆசிட் வீசுவதாக மிரட்டல்கள் வருவதாகவும் அர்ச்சனா புகார் அளித்துள்ளார். இது தொடர்பான ஸ்கிரீன் ஷோட்டை வெளியிட்டு மிகப்பெரிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளார் அர்ச்சனா.

Advertisement

Advertisement