தமிழ் சினிமாவில் தமக்கென்று ஓர் இடத்தைப் பிடித்து பிரபல்யமான பல இயக்குநர்கள் காணப்படுகின்றனர். இவர்களில் மாதவன் மற்றும் விஜய் சேதுபதி நடிப்பில் வெளியாகிய விக்ரம் வேதா திரைப்படத்தின் மூலம் முன்னணி இயக்குநர்களாக அறியப்பட்டவர்கள் தான் புஷ்கர் காயத்ரி தம்பதியினர்.
இப்படத்திற்கு கிடைத்த வெற்றியைத் தொடர்ந்து தற்போது ஹிந்தியில் இப்படத்தை ரீமேக் செய்து வருகின்றனர். இதையடுத்து இப்போது அவர்கள் படங்கள் மற்றும் வெப் சீரிஸ் ஆகியவற்றையும் தயாரித்து வருகின்றனர்.
இந்நிலையில் ஐஸ்வர்யா ராஜேஷ், கதிர் ஆகியோர் நடிப்பில் புஷ்கர்- காயத்ரி கதையில், பிரம்மா மற்றும் அணுசரன் ஆகியோர் இயக்கத்தில் சுழல் என்ற வெப் சீரிஸ் உருவாகி வருகிறது. இந்த சீரிஸின் புதிய வித்தியாசமான போஸ்டர் சமீபத்தில் இணையத்தில் வெளியாகி கவனம் பெற்றது.
இதையடுத்து தற்போது இந்த சீரிஸ் ஜூன் 17 ஆம் தேதி முதல் நேரடியாக ப்ரைம் வீடியோவில் 5 மொழிகளில் ஸ்ட்ரீம் ஆக உள்ளதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.
Listen News!