• May 18 2024

சொப்பன சுந்தரி ரேஞ்சுக்கு மாறிய அஞ்சலி பாப்பா... 35 வயதில் குட்டை உடையில் க்யூட்டான ரியாக்ஷன்..!

Prema / 1 year ago

Advertisement

Listen News!

தமிழ் திரையுலகில் குழந்தை நட்சத்திரமாக நடித்துப் பிரபலமான ஒருவரே நடிகை பேபி ஷாமிலி. இவர் இயக்குநர் மணிரத்னம் இயக்கத்தில் 1990 இல் ரகுவரன், ரேவதி நடிப்பில் வெளியான 'அஞ்சலி' படத்தில் அஞ்சலியாக நடித்து தேசிய விருது மற்றும் தமிழ் நாடு திரைப்பட விருதினையும் பெற்றார். 


இப்படத்திற்கு பிறகு தமிழில் மட்டுமன்றி மலையாளம், தெலுங்கு, கன்னடம் போன்ற பல மொழிப்படங்களிலும் குழந்தை நட்சத்திரமாக நடித்து வந்தார். இவருக்கு முன்பே இவரது அக்கா ஷாலினியும் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி இருக்கிறார். 


குறிப்பாக 10 ஆண்டுகளாக 2000-ஆம் ஆண்டுகள் வரை குட்டி நட்சத்திரமாக நடித்து 2009 இல் தெலுங்கு மொழியில் வெளியான 'ஓய்' என்ற படத்தில் கதாநாயகியாக அறிமுகமாகினார்.

ஷாலினி-அஜித்குமார் திருமணத்திற்கு பின் அக்காவுக்கு பதில் ஷாமிலி நடிப்பில் ஆர்வம் காட்டி வந்தார். அந்தவகையில் 'வீரசிவாஜி, அம்மன் மங்கரில்லு' போன்ற பல படங்களில் நடித்திருந்தார்.


இதனைத் தொடர்ந்து பின்னர் நடிப்பை விட்டு விட்டு ஓவியக்கலையில் ஆர்வம் கொடுத்து ஓவியம் வரையவும் படிக்கவும் சென்று விட்டார். இந்நிலையில் தற்போது 35 வயதாகும் ஷாமிலி இன்னும் திருமணம் செய்யாமல் வெளிநாடு பயணத்தில் இருந்து வருகிறார்.

அத்தோடு சமூக வலைத்தளங்களிலும் ஆக்டிவாக இருந்து வருகின்ற இவர் சமீபத்தில் குட்டையான ஆடையணிந்து வீடியோ ஒன்றினை வெளியிட்டு ரசிகர்களை ஈர்த்து வருகிறார்.


Advertisement

Advertisement