• May 18 2024

லியோ படத்தின் தீம் பாடலை பாடி அசத்திய சிறுவனுக்கு அனிரூத் கொடுத்த சூப்பர் கிப்ட்- ஆர்ப்பரித்த ரசிகர்கள்

stella / 1 year ago

Advertisement

Listen News!

நடிகர் விஜய் நடித்து வரும் லியோ திரைப்படத்திற்கு அனிரூத் இசையமைத்து வருகின்றார்.ஏற்கனவே இந்தப் படம் பல மாதங்களாக ரசிகர்களின் அதிகப்படியான எதிர்பார்ப்பிற்கு உள்ளான நிலையில், இப்படத்திற்காக அனிரூத் அமைத்த தீம் பாடல் சிறப்பாக அமைந்தது.இந்தப் பாடல் மேலும் ரசிகர்களின் ஆர்வத்தை அதிகரித்துள்ளது. 


தற்போது அமெரிக்காவில் தன்னுடைய ஒன்ஸ் அப்பான் அ டைம் இசை நிகழ்ச்சிக்காக சுற்றுப்பயணத்தில் உள்ளார் அனிருத்.வாஷிங்டன் டிசியில் நடைபெற்ற முதல் நகிழ்ச்சியை தொடர்ந்து நியூஜெர்சியில் நேற்றைய தினம் அடுத்த நிகழ்ச்சியை ராக்ஸ்டார் குழுவினர் நடத்தி முடித்துள்ளனர். இந்த நிகழ்ச்சியின் போது ரசிகர்களுடன் பேசிய அனிரூத், அவர்களுடன் அதிகமான புகைப்படங்களையும் எடுத்துக் கொண்டார். இந்த நிகழ்வின்போது லியோ படத்தின் தீம் பாடலை சிறுவன் ஒருவன் முழு உற்சாகத்துடன் பாடி அனைவரையும் கவர்ந்துள்ளார்.


அந்த சிறுவன் அனிரூத் முன்பு இந்தப் பாடலை பாடி முடித்த நிலையில், சுற்றிலும் இருந்தவர்கள் அதிகப்படியான கைத்தட்டலுடன் ஆர்ப்பரித்தனர். இதையடுத்து அவனது பாடும் திறமையை கண்டு பிரமித்த அனிரூத், தான் அணிந்திருந்த கூலிங்கிளாசை அந்த சிறுவனுக்கு பரிசாக அளித்து சிறுவனுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்தார்.


 லியோ படத்தை தொடர்ந்து ஜவான், இந்தியன் 2, தலைவர்170, என்டிஆர்30 ஆகிய படங்களில் அனிருத் இசையமைக்க கமிட்டாகியுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.



Advertisement

Advertisement