• Jul 19 2024

வெளியான பிரபு தேவாவின் அடுத்த படத்திற்கான அப்டேட் !

Thisnugan / 1 month ago

Advertisement

Listen News!

நடிகர்,இயக்குனர்,நடன இயக்குனர் என பல்துறை ஆளுமையான பிரபு தேவாவின் அடுத்த படத்தின் அப்டேட் வெளியாகி ரசிகர்களை மகிழ்வித்திருக்கிறது.தற்போது பிரபு தேவாவின் நடிப்பில் "பேட்ட ராப்" தயாராகி வரும் நிலையில் அடுத்த படத்திற்கான தலைப்பு அறிவிக்கப்பட்டிருக்கிறது.

Image

பிரபு தேவா கதாநாயகனாக நடிக்கும் இப் படத்திற்கு "மூன் வாக்" என பெயரிட்டிருக்க நிச்சயம் நடனத்தினை மையப்படுத்திய படமாக இருக்கக்கூடும் என சினிமா வட்டாரங்கள் பேசிக்கொள்கின்றன.பிஹைண்வுட்ஸ் நிறுவன தலைமை இயக்குனர்  மனோஜ் இயக்கும் இப்படத்தினை பிஹைண்வுட்ஸ் நிறுவனமே தயாரிக்கிறது.

Image

மேலும் போனஸாக இப் படத்திற்கு இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்கிறார் என்பதும் கூடுதல் தகவல். பேமிலி என்டரெயினராக உருவாகும் இப் படத்தின் படப்பிடிப்பு வேலைகள் துரிதமாக நடைபெற்று வரும் நிலையில் வருகிற வருட ஆரம்பத்தில் திரையரங்கில் எதிர்பார்க்கலாம் என படக்குழு தெரிவித்திருக்கிறது.



Advertisement

Advertisement