• Jan 18 2025

காதலர் தினத்தில் கணவருடன் தியானம் செய்த அமலா பால்.. அதுவும் எங்கே தெரியுமா?

Sivalingam / 11 months ago

Advertisement

Listen News!


பொதுவாக காதலர் தினத்தில் திரையுலக பிரபலங்கள் தங்கள் துணையுடன் வெளிநாட்டில் ரொமான்ஸ் மூடில் இருப்பார்கள் என்பதை பார்த்திருக்கிறோம். ஆனால் நடிகை அமலாபால் காதலர் தினத்தில் தனது கணவருடன் கோவையில் உள்ள ஈஷா தியான மையத்தில் தியானம் செய்யும் புகைப்படத்தை வெளியிட்டுள்ள நிலையில் ரசிகர்கள் அவரது செயலை பார்த்து ஆச்சரியமடைந்துள்ளனர்.

தமிழ் திரை உலகில் அஜித், விஜய் உள்பட பல பிரபலங்களுடன் நடித்த நடிகை அமலாபால் இயக்குனர் ஏஎல் விஜயை திருமணம் செய்த நிலையில் சில ஆண்டுகளில் கருத்து வேறுபாடு காரணமாக அவரை பிரிந்தார். அதன் பின்னர் சமீபத்தில் அவர் தேசாய் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்ட நிலையில் தற்போது அவர் கர்ப்பமாக இருப்பதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.



இந்நிலையில் நடிகை அமலாபால் அவ்வப்போது கர்ப்பமான புகைப்படங்களை சமூக வலைதளத்தில் பதிவு செய்த நிலையில் நேற்று காதலர் தினத்தை முன்னிட்டு தனது காதல் கணவர் தேசாயுடன் கோவையில் உள்ள ஈஷா தியான மையத்திற்கு சென்றதாகவும் அங்கு தனது கணவரின் மடியில் படுத்து தியானம் செய்ததாகவும் தெரிவித்துள்ளார்.

மேலும் ஈஷா தியான மையத்திற்கு வந்தது தனது மனதுக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது என்றும் அன்பு மிக அதிகமாக பரவி இருக்கும் இடம் இதுதான் என்றும் அவர் கூறியுள்ளார். காதலர் தினத்தில் தனது காதல் கணவருடன் தியானம் செய்யும் புகைப்படங்களை அவர் வெளியிட்டுள்ள நிலையில் அந்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

Advertisement

Advertisement