• May 18 2024

முதல் இரண்டு இடத்தையும் அடுத்தடுத்துத் தட்டித் தூக்கிய அஜித்... கொண்டாடும் ரசிகர்கள்..!

Prema / 1 year ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் வெற்றி நாயகனான அஜித் நடிப்பில் தற்போது உருவாகி இருக்கும் படம் 'துணிவு'. அதாவது 'நேர்கொண்ட பார்வை, வலிமை' ஆகிய படங்களின் வெற்றியைத் தொடர்ந்து அஜித் குமார், இயக்குநர் ஹெச் வினோத் கூட்டணியில் 3ஆவதாக இப்படம் உருவாகியுள்ளது.


ஏனைய படங்களைப் போலவே இந்தப் படத்தையும் போனி கபூர் தான் தயாரித்துள்ளார். அத்தோடு அஜித்துடன் இணைந்து இப்படத்தில் மஞ்சு வாரியர் முக்கிய ரோலில் நடித்துள்ளார். அதுமட்டுமல்லாது சமுத்திரக்கனி, வீரா, மமதி சாரி, சிபி சந்திரன், மகாநதி சங்கர், பிரேம்குமார் எனப் பலரும் நடித்துள்ளனர். இந்தப் படத்திற்கு நீரவ்ஷா ஒளிப்பதிவு செய்ய, ஜிப்ரான் இசையமைத்துள்ளார்.

இப்படமானது பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வெளியாக உள்ள நிலையில், தமிழக திரையரங்கு உரிமத்தை உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம் கைப்பற்றியுள்ளது. அத்தோடு வெளிநாட்டு உரிமத்தை லைகா நிறுவனம் கைப்பற்றியுள்ளது. 


துணிவு படத்தின் முதல் சிங்கிள் டிராக் சில்லா சில்லா பாடல் ஏற்கனவே வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்றது. மேலும் இன்னமும் அந்தப் பாடல் தான் யூடியூஒ டிரெண்டிங்கில் நம்பர் 1 இடத்தில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

அத்தோடு சில்லா சில்லா பாடலைத் தொடர்ந்து துணிவு படத்தின் 2ஆவது சிங்கிள் டிராக்கான காசேதான் கடவுளடா என்ற பாடல் ஆனது நேற்றைய தினம் வெளியாகி ரசிகர்களால் அதிகம் பார்க்கப்பட்டு வருகிறது. அதாவது 'ஜிப்ரான்' இசையில் உருவாகியுள்ள இந்த பாடலை வைஷாக், மஞ்சு வாரியர் மற்றும் ஜிப்ரன் ஆகியோர் பாடியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் இந்த இரண்டு பாடல்களும் ரசிகர்கள் மனதை பெருமளவில் கவர்ந்துள்ள நிலையில், Youtube ட்ரெண்டிங்கில் இரண்டு பாடல்களும் தான் முதல் இரண்டு இடத்தை பிடித்துள்ளன. இதனை ரசிகர்கள் தமது சமூக வலைத்தளப் பக்கத்தில் பகிர்ந்து வருகிறார்கள்.


Advertisement

Advertisement