• May 19 2024

ஏ.கே 63 திரைப்படத்தில் இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரனுடன் இணைந்த அஜித்! சம்பளம் இத்தனை கோடியா? வாயை பிளக்கும் தல ரசிகர்கள்!

sarmiya / 7 months ago

Advertisement

Listen News!

மகிழ் திருமேனி இயக்கத்தில் நடிகர் அஜித் துணிவு படத்திற்குப் பின் நடித்துக் கொண்டிருக்கும் படம் விடாமுயற்சி.  இந் நிலையில் விடாமுயற்சி படத்தில் அஜித் இரட்டை வேடங்களில் நடித்து வருவதாகவும் தகவல்கள் வெளியாகி இருந்தது.  இப்படத்தினை முடித்த பின்,  நடிகர் அஜித் மார்க் ஆண்டனி படத்தின் இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரனின் படத்தில் நடிக்க இருப்பதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. 



அஜித்தின் ரசிகரான ஆதிக் ரவிச்சந்திரன், மார்க் ஆண்டனி படத்தின் வெற்றிக்குப் பின், நடிகர் அஜித்தைச் சந்தித்து அவரது 63ஆம் படத்திற்கான கதையைச் சொல்லியிருக்கிறார். இது அஜித்துக்குப் பிடித்துப் போக உடனே ஓகே சொல்லி விட்டாராம். 


இந்நிலையில் அஜித்  நடிக்கும்  AK63 திரைப்படத்திற்கான ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ள நிலையில் நடிகர் அஜித்திற்கு 163 கோடி ரூபாய் சம்பளம் நிர்ணயிக்கப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி இருக்கின்றது.

Advertisement

Advertisement